ஈஷாவில் அமித் ஷாவுக்கு தேர்தல் பிரசாரம்… வேலுமணியுடன் கூட்டணிக்கு அச்சாரம்..?

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் அவரது ஈஷா யோகா மையத்தில் ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரி விழாவில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இந்திய ஜனாதிபதி, பிரதமர் மோடி என்று திட்டமிட்டு மிகப்பெரிய விஐபிகளை அழைத்துவ்ருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை ஸ்பெஷல் வி.ஐ.பி.யாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. முக்கியப் புள்ளி எஸ்.பி வேலுமணி […]
புனித நீராடும் மோடி… கும்பமேளா மரணங்கள் மறைக்கப்படுகிறதா..?

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேபோல் இமயமலை தியானம், கன்னியாகுமரி தியானம், ராமர் கோயில் திறப்பு, புனிதநீராடல் என்று முழுக்க முழுக்க மதத் தலைவராக மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் […]
அயோத்தியாகும் திருப்பரங்குன்றத்தால் தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து..? அலறும் சேகர் பாபு.

இந்திய அரசியலை அயோத்தி மாற்றியது போல் தமிழக அரசியலை திருப்பரங்குன்றம் மாற்றும். அங்கே ஸ்ரீராமன் இங்கே திருமுருகன். அங்கே பாபர், இங்கு சிகந்தர். மிகப்பெரும் எழுச்சி உருவாகி வருகிறது. கந்தன் மலையை கை வைத்தவர், அரசியலில் இனி கந்தல் ஆவது உறுதி என்று தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போர்க்குரல் எழுப்புகிறார்கள். இதற்கு அமைச்சர் சேகர்பாபு இன்று திருப்பரங்குன்றம் போராட்டம் குறித்து, ‘’தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் மதுரையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். […]
திருப்பரங்குன்றத்தில் தீ…? மதக் கலவரம் தூண்டும் போஸ்டர்கள்

வடக்கு மாநிலங்கள் போன்று தமிழகத்தில் மதக் கலவரங்கள் நடந்தது இல்லை. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் மலை மீது இருக்கும் தர்காவை வைத்து தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய சமூக அமைப்பினர் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக, திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணி உள்பட பல இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது மட்டுமின்றி, முன்னெச்சரிக்கையாக பலரையும் கைது செய்திருப்பது ஏரியாவை களேபரமாக்கி வருகிறது. இந்த விவகாரம் குறித்துப் பேசும் இந்து முன்னணி […]
கோமியம் குடிக்கும் போராட்டம் நடத்துமா பா.ஜ.க.? மீண்டும் காமகோடி ஆதரவு

கோமியம் மிகப்பெரிய மருந்து என்று ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதற்குகடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் கோமியம் குறித்து ஆய்வறிக்கை இருக்கிறது,நானும் குடித்திருக்கிறேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்காமகோடி. இது குறித்து பேசும் மருத்துவர்கள், ‘’கோமியம் குறித்த புரளி வரும்போதெல்லாம் அமெரிக்காவில் patent வாங்கி வைத்திருப்பதாகசொல்வது வழக்கம். அப்படித்தான் காமகோடியும் அதை மேற்கோள் காட்டியிருக்கிறார். உண்மையில்அமெரிக்கர்கள் யாரும் பேடண்ட் வாங்கவில்லை. நாக்பூரைச் சேர்ந்த Go VigyanAnusandhan Kendra என்ற பசுக்கள் ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆய்வு […]
ஐஐடி கேன்டீனில் கோமியம் சப்ளை..? இயக்குநருக்கு எவ்ளோ மூளை

சென்னை மேற்கு மாம்பலம் கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, ‘”கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. தமிழர்கள் காசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களைப் போன்று தென் மாவட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மாணவர் கழகம், ’’கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் […]
ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பண்டைய காலம் முதல் தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளமாக உள்ளது. இடைபட்ட காலத்தில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு குறித்து அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வழிகாட்டு […]
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு !

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க […]
ஐ’ம் ஸாரி ஐயப்பா இசைவாணி தலைமறைவு..? வைரலாகும் பாடல்

ஆர்ம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு சிக்கல் உண்டாக்கிய பா.ரஞ்சித் உருவாக்கியிருக்கும் ஐ’ம் ஸாரி ஐயப்பா பாடலையொட்டி சமுகவலைதளத்தில் நடக்கும் மோதல் பெரும் வைரலாகியுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள், ‘’இந்த பாடலுக்கு பா ரஞ்சித் , இசைவாணி இருவரையும் திமுக அரசு கைது செய்யாதது ஏன்? ஐய்யப பக்தர்களை திட்டமிட்டு ஒவ்வொரு வருடமும் இதே மாதங்களில் அவமதிப்பதோடு – மத மோதலைத் தூண்டும் இவர்கள் இருவரும் கைது செய்யாது ஏன்? திமுக ஆசியோடு தான் இது நடக்கிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள். ஐயப்ப […]
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் யானை மிதித்து யானைப்பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உதயா என்ற பாகன் அங்கிருக்கும் தெய்வானை என்ற பெண் யானைக்கு பாகனாக இருந்து அதனை பராமரித்து வருகிறார். இந்நிலையில் யானைக்கு பழம் கொடுக்க வந்த போது பாகன் உதயாவையும் அவருடன் வந்தவரான உறவினரான கிருஷ்ணபாலன் என்பவரை தெய்வானை யானை 2 பேரையும் […]

