புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை: 3 இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்!

புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை வா வா என்று அழைத்து வீடியோ எடுக்க முயற்சித்த 3 இளைஞர்களை சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு ஜெய்த்தூர் காடுகளில் உதவி சப்இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஷா (வயது 23) மற்றும் நந்தினி சிங் (வயது 25) ஆகிய மூவர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் 50 முதல் 60 பேரும் சுற்றுலா […]
ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்! முதல்வர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு தீபம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, தீபாவளி முதல் ஆண்டுதோறும் 3 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டுச்செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட […]
இர்பானை மன்னிக்க முடியாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல இர்பானை மன்னிக்கவே முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபல யூடியூபர் தன்னோட மனைவி ஆலியாவை கடந்த ஜூலை மாதம் பிரசவத்திற்காக அனுமதித்தார். அதன்படி ஜூலை 24ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருந்த இர்பான் அங்கு நடக்கும் சிகிச்சையை தன்னுடன் அழைத்து சென்ற வீடியோகிராபரை வைத்து வீடியோவாக பதிவு செய்தார். […]
தமிழகத்தில் 304 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்! எங்கு எப்போது தெரியுமா?

வருகிற 21ம் தேதி (திங்கட்கிழமை) 304 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் 2024& 2025ம் நிதி ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட 60 ஆயிரம் ரூபாய் சீர்வரிசை வழங்கி திருமணம் செய்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி வருகிற திங்கட்கிழமை […]
அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்!

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 14ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் […]
உச்சத்தை தொட்ட தக்காளியின் விலை: மத்திய அரசு புதிய தகவல்!

தங்கத்தை போல் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மழை காலங்களில் தக்காளி விலை தாறுமாறாக உயர்வது வாடிக்கையாகிவிட்டது. விளைச்சல் பாதிக்கப்படுவதால் இந்த விலை வீழ்ச்சி என்றாலும் இல்லத்தரசிகள் மற்றும் உணவகம் நடத்தி வருபவர்களின் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலங்களில் நியாயவிலைக் கடைகளில் தக்காளியை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தக்காளி விலை குறித்து […]
தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட முதல்வர்!

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தேங்கிய மழைநீரை துரிதமாக தூய்மைப் பணியாளர்கள் அகற்றினார்கள். அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் வெற்றிகரமாக ஆங்காங்கே தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சென்னை கொளத்தூர் […]
சத்தமே இல்லாமல் கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து சென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமுதல் அதிகமழை கொட்டித் தீர்த்தது. நேற்று (அக்.16) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் […]
கனமழை எச்சரிக்கை: நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று (அக்டோபர் 14) உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் வலுப்பெற்று நகர்ந்து, நாளை மற்றும் நாளை மறுதினம் […]
சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மக்களின் வேகமான வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் துரித உணவகங்களும், ஆர்டர் செய்து உணவு சாப்பிடும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் சவர்மா, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட துரித உணவகங்களை அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை கீழ் நான்காம் வீதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் துரித உணவகத்தை நடத்தி […]

