News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு திடீர் கடிதம்!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.   தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசு.   லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் கர்நாடகா மற்றும் கோவா கடற்கரை […]

த.வெ.க.மாநாடு: காவல்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆலோசனை!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த்.   ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விஜய் மற்றும் புஸ்சி ஆனந்த் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். மாநாட்டிற்கான பூஜை மேற்கொள்ளப்பட்டு பந்தல் நடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு […]

கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்! பிரச்சினையை கையில் எடுத்த எச்.ராஜா!

கோவில் ரொம்ப புனிதமான இடம். அங்க கேலி, கிண்டல், கூத்துக்கு இடம் கிடையாது என்ற வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தமிழகத்தில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.   உலகப்புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகியான இளையராஜா கோவிலுக்கு வந்த நிலையில், தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை தன்னுடைய செல்போனில் வீடியோ […]

சாம்சங் நிறுவனத்தின் கையாளாக செயல்படும் தி.மு.க.! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வருகிறது சாம்சங் தொழிற்சாலை. அங்கு பணியாற்றி வரும் பணியாளர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.   இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை […]

மாணவர்கள் மோதல்: சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு!

கல்லூரி மாணவர்கள் மோதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சுந்தர் என்பவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி கோஷ்டி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 5ம்தேதி) சுந்தர் சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் […]

திருப்பூர் வெடி விபத்து: உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிக்குட்பட்ட பெருமாநல்லூர் சாலை அமைத்துள்ளது.  இங்கு பாண்டியன் நகர் சத்யா காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கோவில் விசேஷங்களுக்கு தேவையான பட்டாசு நாட்டு வெடிகளை வீட்டில் இருந்தபடியே தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) மதியம் திடீரென்று கார்த்திக் வீட்டில் இருந்து வெடிசத்தம் கேட்டது. இதில் அவர் வீடு தரைமட்டமாக சேதமடைந்தது. இந்த வெடி விபத்தில் […]

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.   அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும், அக்டோபர் 12ம் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்துக்கும் விடுமுறை என்பதால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.   அந்த வகையில் தமிழக அரசு […]

மெரினா உயிரிழப்பு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த உள்துறை செயலர்!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்சசியை கண்டுகளித்து மயங்கிவிழுந்த பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை உரிய விளக்கமான பதில் அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படை நடத்தி விமான சாகசத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். காலை 11 மணிக்கு  முதல் மதியம் 1 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றதால் வெயில் காரணமாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவும் பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் மயங்கி […]

ஆதவ் அர்ஜூனனை வைத்து வி.சி.க. போடும் மாஸ்டர் பிளான்! ஆடிப்போன தி.மு.க.!

தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெறுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதில் இருந்து என்று கேட்டால், ஆதவ் அர்ஜூனன் எப்போது வி.சி.க.வில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதில் இருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.   அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக இருந்த நிலையில், சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்தார். மேலும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி வி.சி.க.வும் சில உள்குத்து […]

சேதமடைந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 4) கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா 9ம் நாட்கள் தொடர்ந்து நடக்கும். அதாவது வரும் 12ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.   பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் […]