16 மாவட்டங்களுக்கு மழை வர வாய்ப்பு.

வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது . இதை தொடர்ந்து தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை […]
மழைக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்! அசந்து போன பொதுமக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தனது ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது என்று மகிழ்ச்சியடைய நேரமே இல்லாமல், வீடுகளுக்குள் புகுந்துவிடும் மழைநீரை எப்படி வெளியேற்றுவது, எங்கே தஞ்சமடைவது, வீட்டு உபயோகப் பொருட்களை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் என்ற வாதம் முன்வைக்கப்படும் போதிலும், பொதுமக்கள் நெகிழி பைகளையும், நெகிழி பொருட்களையும் ஆங்காங்கே வீசி, மழைநீரை உறிஞ்ச முடியாத அளவுக்கும், […]
ஏர் இந்தியாவுடன் இணைந்தது விஸ்தாரா ஏர்லைன்ஸ்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியது . அதன்பின்னர் டாடாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா – விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் […]
கியூபாவில் தொடர்ந்து இருமுறை நிலநடுக்கம் !

கியூபாவில் இன்று (11/11/2024) அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது . அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது . அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பயத்தில் இருந்தனர் . அதை தொடர்ந்து அருகில் உள்ள ஜமைக்காவில் உள்ள உள்ளூர் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தென்மேற்கு வங்கக்கடல் இன்று முதல் நவம்பர் 15-ம் தேதி வரை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக தகவல் , இதன் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது . அதை தொடர்ந்து தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று (11/11/2024) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் கணித்தது . அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம் ,கடலூர் , மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் […]
சிட்னி விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து !

சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு குவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் இன்று மதியம் 1 மணி அளவில் புறப்பட்டது . புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் வலது புறம் உள்ள என்ஜின் வெடித்து தீ பற்றியது. அதனால் விமானம் 3ம் ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கியது . அதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்டுக்குள் கொண்டுவந்தனர் . இந்த விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பனமுறையில் மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் தனியார் செய்தித்தாள் […]
கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் !

தென்மேற்கு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் வளிமண்டல சுழற்சி நிலவும் நிலையில் , தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் , புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் , இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெருவித்துருத்தது . இதன் தாக்கம் காரணமாக இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது […]
கோடநாடு வழக்கு: அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்தி பேசிய தனபாலுக்கு தடையும், அவதூறாக பேசியதற்காக அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா கோடை நாட்களில் தங்கி ஓய்வெடுக்கும் கோடநாட்டில் அவரது மறைவுக்கு பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. அதைத்தொடர்ந்து இதுகுறித்தான வழக்கும் இன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கடந்த […]
தீபாவளி எதிரொலி: 300க்கும் மேற்பட்டோரின் கண்பார்வை பாதிப்பு!

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இருப்பினும் தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பலர் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதோடு தீபாவளி முடிந்தும் நவம்பர்3ம் தேதி வரை ஆர்வமாக பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், அதை மீறி பலர் பட்டாசு வெடித்தபோது விபத்துகளில் சிக்கின அசம்பாவிதங்களும் அரங்கேறின. அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதிவரை […]
தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நெல்லைக்கு சிறப்பு ரெயில்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். படிப்பு, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கியுள்ளனர். பண்டிகையை சொந்த […]

