சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி! ஆந்திராவில் பரபரப்பு!

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜயவாடாவில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு சார்பில் பலமுறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் அனைத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவர்ம, இன்னர் […]
ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு! தமிழக சட்டப்பேரவைக்கு வருகை!

தமிழக சட்டப்பேரவைக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் வருகை புரிந்துள்ளனர். சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடிய நிலையில் கர்நாடக அரசை காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி ஒன்றிய அரசை உத்தரவிடக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வந்தார். இதற்கிடையில் சட்டப்பேரவையின் நடவடிக்கையில் நேரில் காண்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுத் தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு […]
காவிரி விவகாரம்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து உரையாற்றினார். இன்று (அக்.9) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதோடு பஞ்சாப் முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் […]
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி! ம.பி. நவ.17, தெலுங்கானா நவ.30, ராஜஸ்தான் நவ.23

5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது. மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் […]
மகளிர் உரிமை மாநாட்டின் அழைப்பிதழ்! முதல்வருக்கு வழங்கிய கனிமொழி!

முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கனிமொழி எம்.பி., அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 14ம் தேதி (அக்டோபர்) மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க […]
அணை- தெர்மாகோல்! கலாய்த்து தள்ளிய அமைச்சர் துரைமுருகன்!

அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய போது சிரிப்பலையால் அரங்கமே அதிர்ந்தது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை (அக்.9) கூடியது. அதைத்தொடர்ந்து வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசும் போது, ‘‘மதுரை மாநகரில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்து வருவதால் அரசு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் […]
முதலமைச்சர்- அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு! பரபரப்பான அரசியல்களம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திடீரென்று சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு பிளவுகளும், கூட்டணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்களை திடீரென்று நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் இன்று தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, பா.ம.க. தலைவர் அன்புமணி […]
முதல்வரிடம் கோரிக்கை மனு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சந்திப்பு!

தமிழக அரசு செய்து வரும் மகளிர் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நேரில் சந்தித்தனர். அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்தது […]
கனவு இல்லத்தை பெறும் பயனாளர்களுக்கு வாழ்த்துக்கள்! சேப்பாக்கத்தில் உதயநிதி பேச்சு!

சேப்பாக்கம் தொகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகரில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் கடந்த 1979ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டுகளில் 392 வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்து பழுதடைந்த […]
காவிரி விவகாரம்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்?

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் மார்ச் மாதம் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது நிதி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் […]

