மாவட்டந்தோறும் ‘தோழி விடுதி’! அமைச்சர் கீதா ஜீவன் உறுதி!

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில், ‘மாவட்டந்தோறும் ஒரு தோழி விடுதி’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் 2வது நாள் அவை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் தனித்தனியே பதில் அளித்து வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான மரகதம் குமரவேல் பேசும்போது, ‘‘மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு ‘தோழி விடுதி’ அமைக்க வேண்டும் என்ற […]
மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை! முதல்வர் அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பதில் அளித்து பேசினார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அ.தி.மு.க., காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அனைவருக்கும் 1,000 ரூபாய் வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது என்று முதலமைச்சரை […]
சிறு வணிகர்களுக்கு குட்நியூஸ்! மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

சிறு வணிகர்கள் பயனடையக் கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு வெளியிட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்ச்சியில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உறுப்பினர்கள் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ‘‘50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமின் மனுதாக்கல்!

அமைச்சர் செந்தில்பாலாஜி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமின் வழங்குமாறு மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் தங்கள் சட்ட நடவடிக்கையை […]
அக்.15ல் தேர்தல் அறிக்கை வெளியீடு! பரபரப்பான தெலுங்கானா!

தெலுங்கானாவில் வருகிற அக்டோபர் 15ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் சந்திரசேகரராவ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதால் அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று நேற்று (அக்.9) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவித்திருந்தார். மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி 30ம் தேதி […]
குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட செவிலியர்கள்! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் இன்று காலை குண்டுகட்டாக போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையிடல் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவது, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த 500 செவிலியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை டி.எம்.எஸ். […]
முக்கிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு! எங்கே தெரியுமா?

பூரி ஜெகந்நாதர் கோவிலில் வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த புராதன கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்குள் பக்தர்கள் கேமரா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும், கோவிலில் படம் எடுக்கவும் ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 1ம் தேதி […]
பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியது குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பொதுக்கூட்டத்தை கூட்டி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான குமரகுரு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அமைச்சர் உதயநிதி குறித்தும் அவதூறாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குமரகுரு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கை […]
ரோஜாவுக்கு நாங்கள் இருக்கிறோம்! ரம்யா கிருஷ்ணன், ராதிகா ஆதரவு!

ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை பற்றிய அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகைகள் ரம்யாகிருஷ்ணன் மற்றும் ராதிகா ஆகியோர் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். ஆந்திர மாநில அமைச்சரான ரோஜா ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்தியநாராயணமூர்த்தி சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு அக்கட்சியின் மகளிர் அணி தலைவியும் ரோஜா குறித்து பல அவதூறுகளை பரப்பி எச்சரிக்கைவிடுக்கும் விதமாக பேசியிருந்தார். இதனால் வேதனையடைந்த ரோஜா கண்ணீர் […]
அரியலூர் பட்டாசு விபத்து பலி! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

அரியலூர் மாவட்டம் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரைச் சேர்ந்த அருண் என்பவர் விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டதில் […]

