News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தி.மு.க.வை எதிர்த்து அண்ணாமலை உண்ணாவிரதம்! என்ன விஷயம் தெரியுமா?

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க.வை எதிர்த்து வருகிற 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   அ.தி.மு.க. உடனா கூட்டணி முறிந்த பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார். பா.ஜ.க. தலைமையை சமாதானப்படுத்துவதற்காகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க.வை தூக்கி நிறுத்துவதற்காகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.   அந்த வகையில் அண்ணாமலை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம்! சிக்கலில் ஜெகத்ரட்சகன்!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி பிணவறையில் மூட்டை மூடையாக பணம் கைப்பற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி என 70க்கும் மேற்ப்டட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கணக்கில் வராத ரூ.4 […]

காவிரி விவகாரம்! டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் இவ்விவகாரத்தில் மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்தும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கடையடைப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 1 லட்சத்திற்கும் […]

சென்னையில் பா.ஜ.க. மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று கூடி தற்போது நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க. தனது கூட்டணியை முறித்துக் கொண்டது. இதற்கு  காரணம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைதான் என்றும், இனி கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார். அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை மத்திய நிதி […]

காவிரி விவகாரம்! கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூரில் 144 தடை உத்தரவு, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் என தொடர்ந்து கர்நாடக மாநிலம் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு நேற்றைய (அக்.9) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் […]

முத்துராமலிங்கத் தேவர் தங்கக்கவசம்! திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கக்கவசம் வழங்கினார். ஒவ்வொரு குருபூஜையின் போதும் சில நாட்கள் அந்தகக்கவசம் முத்துராமலிங்கத் தேவரை அலங்கரித்து வரும். குருபூஜைக்கு பின்னர் அண்ணாநகரில் உள்ள வங்கியில் உள்ள லாக்கரில் தங்கக்கவசம் பாதுகாக்கப்படுவது வழக்கம். அதற்கான முழு பொறுப்பை […]

ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அறிவிப்பு!

தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டப்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது’’ […]

பா.ஜ.க.வுக்கு அடுத்த தலைவலி! முக்கிய தலைவர் ராஜினாமா!

பா.ஜ.க.வில் இருந்து பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு சாதியில் இருந்தும் முக்கியமான நபரை தனது கட்சிக்குள் இணைத்து பட்டியல் அணி தலைவராக நியமித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தற்போது பட்டியல் அணி துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தது அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் பெரிய சறுக்கல் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்டதில் இருந்து அக்கட்சிக்கு […]

இவர்கள்தான் சிறுபான்மை பாதுகாவலர்களா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.   தமிழக சட்டப்பேரவையின் 2வது நாளான இன்று அவையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அரசாணையால் இஸ்லாமியர்கள் முன்கூட்டியே விடுதலையாவது தடைபடுவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறுவதாக பேசினார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக […]

பாலின, சாதி ரீதியாக தாக்கப்பட்டேன்! பெண் மந்திரி ராஜினாமாவில் பகீர் தகவல்கள்!

புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்த சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல்வேறு பகீர் காரணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரியில் சந்திர பிரியங்கா என்ற பெண் அமைச்சர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ள நிலையில், தனது ராஜினாமா கடிதத்தில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.   அதில், ‘‘என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கி உள்ள நிலையில் நான் இந்த கடிதத்தினை எழுதுகிறேன். […]