16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த […]
செந்தில் பாலாஜி ஜாமீன்? அமலாக்கத்துறை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடுத்த ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்தவேளையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை […]
‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இம்மாதம் 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் […]
திடீரென்று மொட்டையடித்துக் கொண்ட முதலமைச்சரின் மனைவி! முக்கிய பின்னணி!

சட்டமன்ற தேர்தலில் தனது கணவர் சந்திரசேகரராவ் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் அவரது மனைவி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்து கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு வருகிற நவம்பர் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் எதிரொலியாக நேற்று முன்தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மனைவி ஷோபா […]
எடை குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள்! அதிர்ச்சி தகவல்!

சென்னையில் 2வது நாளாக எடை குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆவின் பாலை அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தனியார் பாலை விட ஆவின் பால் தரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் பொதுமக்களின் தேர்வு ஆவின் என்றே சொல்ல வேண்டும். ஆனால் சமீப காலமாக ஆவின் பொருட்கள் குறைந்தளவு விற்பனை செய்யப்பட்டு வருவது பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் […]
தமிழக ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு! நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமா?

தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் 10 நாட்களில் தலா 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் மாளிகையிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 15ம் தேதி நவராத்தி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து […]
முதலமைச்சர் ஏமாற்றம் அளித்துவிட்டார்! டி.டி.வி. தினகரன் வேதனை!

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித உத்தரவாதமும் அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை […]
பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு! முக்கிய பின்னணி!

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். தமிழக சட்டப்பேரவை இன்று 3வது நாளாக கூடியது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை மரபை மாற்ற வேண்டாம். ஏற்கனவே இது […]
ஒரு நாள் இங்கிலாந்து தூதரான சென்னை பெண்! குவியும் பாராட்டு!

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் இந்தியாவுக்கான ஒரு நாள் இங்கிலாந்து தூரக உயர் அதிகாரியான நிகழ்வு பாராட்டுகளை குவித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு நாள் தூதரக உயர் அதிகாரி என்ற போட்டியை நடத்தி வருகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரேயா தர்மராஜன் என்ற […]
எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் இனி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். அதன்படி தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை மற்றும் […]

