News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

1.5 லட்சம் பெண்கள் மாயம்! பிரியங்கா காந்தி சொல்வது என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை 1.5 லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியபிரதேசம் மண்ட்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசும்போது, […]

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நேற்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்த நிலையில் இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். அதன்படி சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். வணிக வரி முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் […]

அண்ணாமலையை கிண்டல் செய்த கே.எஸ்.அழகிரி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

  தமிழக பா.ஜ.க. 9 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு, டெபாசிட் ஆவது வாங்குவீர்களா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் கடுமையாக உழைத்து வருகிறது. ஏற்கனவே தமிழக பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க. கட்சி அதிரடியாக வெளியேறி அதன் பலத்தை குறைத்துள்ளது.   இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் […]

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் ஈரோட்டில் அரங்கேறி வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக ராமேஸ்வர முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் ராமேஸ்வர முருகன் பள்ளிகல்வித்துறை இணை இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. சென்னையில் வசித்து வரும் ராமேஸ்வரமுருகனுக்கு, ஈரோடு மாவட்டட் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த வெள்ளாளங்கோவில் பகுதியில் சொந்த […]

இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள்! Operation Ajay மத்திய அரசு அதிரடி!

இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.   இதைத்தொடர்ந்து 4 முறை போர் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது கடந்த 6 நாட்களாக போர் […]

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்! ஆசிரியர் சங்கங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு!

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் நடத்த உள்ளது.  சென்னையில் நாளை (அக்.13) நடைபெற உள்ள இந்த போராட்ட அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பேச்சுவார்த்தை தொடர்பாக ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களுக்கும் […]

அமித்ஷா- சந்திரபாபு நாயுடு மகன் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் […]

காவிரி விவகாரம்! மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானம் அனுப்பி வைப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தில் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உச்சீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையறுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை கர்நாடக அரசு […]

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த முக்கிய கட்சி! தொண்டர்கள் உற்சாகம்!

அ.தி.மு.க. கூட்டணியில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லீம் கட்சி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது இருக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பா.ஜ.க. தலைமை பெரும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் அண்ணாமலை […]

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த […]