தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு! முதலமைச்சர் நந்தனம் மைதானத்தில் ஆய்வு!

தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான அழைப்பை கனிமொழி எம்.பி. […]
கொடநாடு வழக்கு நவ.24ம்தேதிக்கு ஒத்திவைப்பு! கால அவகாசம் கேட்டதன் பின்னணி!

கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் செல்போன் ஆதாரங்களை திரட்ட காலஅவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான், வளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கை கோவை மாவட்ட […]
வைகோவின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணம்! என்ன நடந்தது?

ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் சின்னத்துரை. இவர் நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நேற்று (அக்.12) நெல்லை அருகே உள்ள இட்டேரி பகுதியில் உள்ள தோட்டத்து பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் சின்னத்துரை தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது நீச்சல் குளத்திற்கு அருகே சின்னதுரை திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சின்னத்துரையை மீட்டு நெல்லையில் உள்ள ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் […]
5 மாநில சட்டமன்ற தேர்தல்! இன்று வேட்பு மனுதாக்கல் தொடக்கம்!

வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் […]
ரூ.173 கோடி சொத்துக்கள் முடக்கம்! 2வது நாளாக லாட்டரி மார்ட்டின் வீட்டில் சோதனை!

லாட்டரி மார்ட்டின் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வருமானவரித்துறையினர் ரூ.173 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈடுடியதாகவும், சட்ட விரோதமாகவும் பணப்பரிமாற்றம் செய்ததாக கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் தொடர்ச்சியாக காந்திபுரத்தில் உள்ள மார்ட்டின் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய 4 இடங்களிலும் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று (அக்.13) […]
தாயகம் திரும்பிய 212 இந்தியர்கள்! திகிலூட்டும் இஸ்ரேல் நாட்கள்!

மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித்தவித்த 212 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர். இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார். இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் […]
பேச்சுவார்த்தையில் உடன்பாடு! ஆசிரியர்கள் போராட்டம் ரத்து!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்கள் நடத்த இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக டிட்டோஜாக் ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது, எண்ணும் எழுத்தும் திட்டடத்தை கைவிடுவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுதொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களை கூட்டு நடவடிக்கைக் குழு இன்று சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். […]
ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வாங்கி குவித்து […]
தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது! அமைச்சர் உதயநிதி!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பதில் நம் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ள மகளிருக்கு நம்பிக்கை தரும் விதமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயனடைந்து வரும் நிலையில், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்களின் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, […]
உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் அழைப்பு!

உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அழைப்பு விடுத்துள்ளார். உடல் உறுப்புதானத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டில் அதற்கான விழிப்புணர்வும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்புதானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்வோம் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இதனால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக […]

