News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கலைஞர் எதையும் தைரியமாக எதிர்கொள்வார்- கனிமொழி எம்.பி. பேச்சு!

தி.மு.க. மகளிர் அணி சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற  ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.   தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எம்.பி. தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் இன்று (டிச1.) திமுக மகளிர் அணி சார்பில் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.   வினாடி  வினா […]

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள்!

பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிச.1) காலை 11 மணியளவில் நடைபெற்றது.    இது குறித்து செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், மேல்பா சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலையம் […]

12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.   வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இது வருகிற 3ம் தேதி (நாளை மறுநாள்) வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் அந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் […]

அயோத்திதாச பண்டிதர் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்திதை இன்று (டிச.1) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் […]

கூட்டணி கட்சிகளை அழைத்த தி.மு.க.! இளைஞரணி மாநாடு எதிரொலி!

தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.   இம்மாதம் (டிசம்பர்) 17ம் தேதி சேலம் மாவட்டம பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தி.மு.க. தனது பலத்தை நிரூபக்கவும், வரவிருக்கின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வியூகம் வகுக்கவும் இம்மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.   இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. இளைஞர் அணியினர் […]

மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து எழும் புகார்களின் அடிப்படையில் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு […]

இனி அப்படி செய்யமாட்டேன்! உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். உத்தரவாதம்

அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னத்தை இனி பயன்படுத்தமாட்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம் அளித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,  அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினருக்கு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று […]

சாதாரண மழைக்கே சென்னை இப்படி ஆகிவிட்டது! எடப்பாடி குற்றச்சாட்டு!

சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று தி.மு.க. அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் […]

கனமழை எதிரொலி! களப்பணியில் அமைச்சர்கள்!

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துவரும் நிலையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் புழல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த […]

தெலுங்கானா தேர்தல்! திரண்டு வந்து வாக்களித்த திரையுலகம்!

இன்று நடைபெற்று வரும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் திரையுலகமே திரண்டு வந்து வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றினர்.   199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.   இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக […]