அடேங்கப்பா இத்தனை கோடியா..? எடப்பாடி பழனிசாமியை மிரளவைத்த ராமதாஸ் தேர்தல் பேரம்

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.வில் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதேநேரம், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வில் இன்னமும் அதற்கான எந்த அசைவும் தென்படவில்லை. எப்படியாவது பா.ம.க.வை மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாக்குகளை அள்ளிக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால், பா.ம.க. போடும் பிளானே வேறு. இந்த தேர்தலில் அவர்களுக்கு தி.மு.க.வில் அழைப்பு இல்லை என்றாலும் அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் அழைப்பு இருக்கிறது. அடுத்த தேர்தலிலும் மோடியே வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நிலக்கோட்டையில் தேவேந்திரகுல வேளாளர்கள் திடீர் போராட்டம்… அடுத்து கருப்புக்கொடி, தேர்தல் புறக்கணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீமகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில். இந்த கோயிலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு தனி மண்டகப்படி அமைத்துத் தரும்படி நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இந்து அறநிலையத் துறை சார்பில் இதற்கு அனுமதி வழங்குவது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி மண்டகப்படி கட்டித்தர மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து நேரடியாக ஒட்டுமொத்த மக்களும் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
5வது ஆம்புலன்ஸ் கொடுத்து மாஸ் காட்டிய நடிகர் பாலா… ஆனந்தக் கண்ணீரில் மலைக்கிராம மக்கள்

மிக்ஜாம் புயல் நேரத்தில் எத்தனையோ பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடந்த நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகர் பாலா. அதன்பிறகும் உதவி செய்வதை பாலா நிறுத்தவே இல்லை. சரியான சாலை வசதியும் வாகன வசதியும் இல்லாமல் கஷ்டப்படும் மலைக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்து மக்களின் துயர் துடைத்து வருகிறார். அதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மலைக்கிராமமான நெக்னா பற்றி […]
காரில் கஞ்சா கடத்திய கொடூர குற்றவாளிகள் 3 பேர் கைது. மடக்கிப் பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் விரட்டிப் பிடித்து கைதுசெய்து வருகிறார்கள். மடிப்பாக்கம் எஸ்.7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது காரில் கஞ்சா கடத்திவந்த ரஞ்சன் கிஷோர் குமார், ஒத்தக்கண் அசோக், உதயகுமார் ஆகிய 3 பேரை […]
மலர்தூவி அஞ்சலி செலுத்திய கனிமொழி கருணாநிதி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி, எம்.பி.அவர்கள், திருமதி.ராஜாத்திஅம்மாள் அவர்களும் இன்று (30.01.2024) நேரில் சாலிக்கிராமத்தில் உள்ள கேப்டன் அவர்களது வீட்டிற்கு சென்று திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
பழனி முருகன் கோயிலில் மாற்று மதத்தினருக்குத் தடை… வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்காவில் இந்துக்கள் நுழையலாமா..?

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் […]
மக்கள் திருந்தவே மாட்டாங்களா…? தமிழகத்தை சுருட்டும் மைவி3 ஆட்ஸ் சீட்டிங்

சதுரங்க வேட்டை படம் வெளியான பிறகு, மக்களை அத்தனை எளிதாக ஏமாற்ற முடியாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், ஆசையைத் தூண்டிக்கொண்டே இருந்தால் ஏமாற்றிகொண்டே இருக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி கோவையை கலக்கியிருக்கிறது மைவி3 ஆட்ஸ் நிறுவனம். திடீரென கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே புறவழிச் சாலையில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டனர். இவர்களில் பெரும்பாலோர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை வெள்ளக்கிணறு […]
பல்டி அடிப்பதில் நிதிஷ்குமார் பலே சாதனை..! பீகார் கேலிக்கூத்து.

’இந்தி மொழியைக் கத்துக்கோங்க’ என்று இண்டியா கூட்டணியில் இருந்துகொண்டே குழப்பம் விளைவித்த நிதிஷ்குமார் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துகொண்டு 9வது முறையாக முதல் மந்திரி பொறுப்புக்கு வந்திருப்பது இந்தியா முழுக்க ஆச்சர்ய அலையை எழுப்பியிருக்கிறது. ஒரு மனிதர் பதவிக்காக எத்தனை முறை பல்டி அடிக்க முடியும் என்பதில் நிதிஷ் பலே சாதனை படைத்துவிட்டார் என்று அத்தனை கட்சியினரும் அவரை கிண்டல் செய்துவருகிறார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் நிதிஷ். பீகாரில் நிதிஷின் […]
தமிழகத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

இன்று தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும்…. தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., – பகோர்லா செபாஸ் கல்யாண், சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., – சக்திவேல், சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் – […]
சென்னை இரண்டாவது தலைநகர்… ஆளுநர் பதவிக்கு ஆப்பு… திருமாவளவனின் தீர்மானங்கள் செல்லுபடி ஆகுமா..?

இந்தியா கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கும் நிலையில், திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எனக்கு திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவராக திமுக மாணவர் அணியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும் கொள்கை வலு பெரும் இளம் காளையாக தான் இன்று ஜனநாயகம் காக்கும் இந்த மாநாட்டை […]

