ராமதாஸுடன் பேரம் முடிந்து விட்டது..? ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சூசக அறிவிப்பு

தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் எடப்பாடி பழனிசாமியிடம், ஒன்றுபட்ட அ.தி.மு.க. வேண்டும் என்று மாஜிக்கள் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள் என்று தினம் தினம் செய்திகள் வெளியாகின்றன. இந்த நிலையில் திடீர் என ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ’2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமையும்’ என்று எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்திருக்கிறார். இதன் அர்த்தம் பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை முடிந்ததுமே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. அ.தி.மு.க.வில் […]
கைதான சாட்டை துரைமுருகனுக்கு குண்டர் சட்டம்..! அதிர்ச்சியில் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது சவுக்கு சங்கர் போன்று வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான வழக்குகள் சேர்க்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தின் போது, கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. ஸ்டிக்கரைக் காட்டி, […]
சென்னையில் 6,000 ரவுடிகளுக்கு செக்! புது கமிஷனர் அதிரடி!

சென்னையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 6,000 ரவுடிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரின் வீடு தேடிச் சென்று அவர்களை நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் ரவுடிகள் அராஜகம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து பல உயர் போலீஸ் […]
மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு! எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Cதமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு என்று அறிவுரை கூறியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சென்னை பெரம்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உண்மையான கொலையாளிகள் கிடையாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். […]
இடைத்தேர்தலுக்கு தயாரான விக்கிரவாண்டி!

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நாளை (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க.சட்டமன்ற வேட்பாளர் புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேர்தல் அறிவிப்பு […]
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! 2 பேர் பலி!

சிவகாசி அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9ம்தேதி) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. முருகவேல் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. 4 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 தொழிலாளர்கள் பட்டாசு மருந்து கலந்து கொண்டிருந்தனர். கோப்பையில் நிரப்பப்பட்டு இருந்த […]
சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடமாற்றம்! யார் இந்த அருண்!

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 8ம்தேதி) திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக புதிய ஆணையராக ஏ.டி.ஜி.பி. அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக முதலில் 8 பேர் பின்னர் 3 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை […]
அண்ணாமலையைத் திட்டுனா பன்னீருக்கு வலிக்குது. எடப்பாடிக்கு கடும் கண்டனம்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைதான் முதுகில் குத்தும் துரோகி என்று கடுமையாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கும் நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாக நிற்கும் ஓ.பன்னீர்செல்வம் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. இதுவரை அ.தி.மு.க.வின் மற்ற தலைவர்கள் மட்டுமே அண்ணாமலை மீது விமர்சனம் செய்துவந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக தாக்கத் தொடங்கியிருக்கிறார். ’’எங்கள் கட்சித் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஆகியோரை பற்றி […]
நள்ளிரவில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம். சீமான் இப்படிச் சொல்லிட்டாரே

கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது படுகொலை விசாரணை குறித்து சீமான் கூறியிருக்கும் கருத்து கடும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வசித்து வந்த பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. ஏரியாவைச் சேர்ந்த பொதுமக்கள், கட்சியினர், ஆதரவாளர்கள் […]
ஆம்ஸ்ட்ராங் உடலை புதைப்பதில் என்ன பிரச்னை..? நீதிமன்ற உத்தரவு வந்தாச்சு

கருணாநிதி உடலை பொது இடமான மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்றால் ஆம்ஸ்ட்ராங்கை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்வதில் என்ன பிரச்னை என்று அவரது ஆதரவாளர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் திருமுருகன் காந்தி, ‘’தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது உடலை அவரது சொந்த நிலத்தில், அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி இதுவரை தராமல் ஏன் திமுக அரசு காலம் தாழ்த்துகிறது? அரசு மருத்துவமனையில் காவல்துறையை குவித்து இந்த துயரமான சூழலில் எதை சாதிக்க நினைக்கிறது திமுக […]

