எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்துக்குக் காரணம் பா.ஜ.க…?

அதிமுகவின் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட ஒரே ஒரு கண்டிஷன், யாரும் ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது என்பது தான். அதனாலே, அத்தனை பேரும் வலுவான கூட்டணி குறித்து வலியுறுத்தினார்கள். இப்போது பன்னீர்செல்வம் மட்டுமின்றி ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கேசி பழனிச்சாமியோடு இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்பதை நிறுவி, ஒன்றிணைப்பு குறித்து தொடர்ந்து […]
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன், அமலாக்கத் துறைக்கு ஆப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, அமலாக்கத் துறைக்கு பெரும் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம், ‘’சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீதான அமலாக்க துறையின் கைது […]
ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு. திருமாவளவன், சீமானுக்கு கமாண்டோ பாதுகாப்பு..?

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த சமயத்தில் முதல் நபராக அங்கே சென்றது மட்டுமின்றி, ‘இப்போது சரண் அடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்று ஆளும் தி.மு.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் திருமாவளவன். கூட்டணிக் கட்சித் தலைவரே பொய்யான நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்த பிறகே தி.மு.க. மீது அனைத்துக் கட்சிகளும் அவதூறு பரப்பின. ஆகவே, இந்த விஷயத்தில் திருமா மீது தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]
சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் சதிகாரன் கருணாநிதி பாடல். மாவுக்கட்டில் இருந்து துரைமுருகன் ஜஸ்ட் எஸ்கேப்.?

ஒரு பாடலை ஹிட் ஆக்குவதற்காக எக்கச்சக்கமாக புரமோஷன் செய்யவேண்டிய காலகட்டம் இது. ஆனால், சாட்டை துரைமுருகனை கைது செய்தது மூலம் கருணாநிதி பாடல் ஒரே நாளில் சூப்பர் ஹிட் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. இது வரை அந்த பாடலை கேட்காதவர்கள் கூட, டவுன்லோடு செய்து பலருக்கும் போட்டுக் காட்டுகிறார். இந்தியாவிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர் அணி வைத்திருப்பதாக சொல்லப்படும் தி.மு.க.வுக்கு சாட்டை துரைமுருகன் கைதும் அவர் விடுதலை செய்யப்பட்டதும் மிகப்பெரும் கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் […]
டாஸ்மாக் கடைகளை உடனடியாக குறைக்க முடியாது! அமைச்சர் முத்துசாமி அந்தர்பல்டி!

புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் தமிழக போலீசார் 24 மணிநேரமும் காவல் இருக்க முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்த போது, அண்டை மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து குடித்த 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக மக்கள் சிலர் புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை […]
அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினர்! ஏன் தெரியுமா?

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்குமான வார்த்தை போர் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மூக்கை நுழைத்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தன்னை விமர்சித்த நிலையில் அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என்று பேட்டி அளித்தார் அண்ணாமலை. இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று தெரிவித்ததோட போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார். இந்தநிலையில் […]
அண்ணாமலை ஒரு வேதாளம்! வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேதாளம் போன்றவர். அவர் இப்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் ஜெயக்குமார் பேசினார். […]
விக்கிரவாண்டியில் ராமதாஸ் ஆருடம் பலிக்குமா?

இடைத்தேர்தல் என்றாலே வழக்கமான தேர்தலைவிட கொஞ்சம் அதிகமாகவே ஓட்டுப்பதிவு நடைபெறும். ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 82 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது விக்கிரவாண்டி. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க. 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். மேலும் அவர், ‘’தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பா.ம.க. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’’ என்று கூறியிருக்கிறார். இது சாத்தியமா என்று பார்க்கலாம். இந்த தேர்தலில் […]
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்வதற்கு அதிரடி வேட்டை

தமிழக காவல் துறைக்கு சவால் விடும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை நாளைக்குள் கைது செய்யவேண்டும் என்று இலக்கு வைத்து தமிழக காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரகாஷுக்கு, விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை […]
மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது… முடிவே இல்லையா மோடிஜி

தமிழகத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவுக்கு வந்து அவர்கள் கடலில் நுழைந்த உடனே இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை விடுவிக்கும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக மீனவர்கள் மேலும் 13 பேர் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து […]

