News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்! உச்சகட்ட பதற்றம்!

கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நீரை திறந்துவிட அம்மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 26ம் தேதி (செப்.) பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.  அதற்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பெங்களூரில் அன்று 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. […]

முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள்! மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூர் முதலமைச்சரின் வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் திடீரென்று முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி (செப்) […]

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்- மத்திய சட்ட ஆணையம் ஆதரவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சட்ட ஆணையம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாடாளுமன்ற மக்களவையுடன் சேர்த்து […]

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். பசுமைப்புரட்சியின் தந்தை என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தனது 98 வயதில் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11.20 மணியளவில் சென்னையில் காலமானார். கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவில் பசுமைப் புரட்சி தொடங்கிய காலகட்டத்தில், பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனையே சேரும். விவசாயத்தை உயர்த்தி அரிசி தட்டுப்பாட்டை நீக்க, அதிநவீன அறிவியல் முறைகளை […]

இப்படியும் ஒரு புகைப்பட கலைஞரா? விருதுநகரில் வினோதம்!

விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்கள் மற்றும் இதுவரை யாரும் அறிந்திடாத சுற்றுலாத் தலங்களை புகைப்படம் எடுத்து அனுப்ப மாபெரும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு புகைப்படக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து தங்கள் படைப்புகளை போட்டிக்காக சமர்ப்பித்தனர். அந்த வகையில் போட்டியின் முடிவுகள் இன்று வெளியான நிலையில், புகைப்பட கலைஞர் முத்துராஜ் என்பவர் மூன்றாம் பரிசு பெற்றார். அவருக்கு பரிசுத்தொகையாக […]

டெங்கு பரவல் எதிரொலி! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டும், இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ முகாம்கள்  மற்றும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு […]

அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! எப்போது தெரியுமா?

அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏ.ஐ.பி.இ.ஏ. அறிவித்துள்ளது. வங்கிகளில் அதிக ஊழியர்களை நியமிக்கக் கோரி நேற்று (செப்.27) அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏ.ஐ.பி.இ.ஏ.) நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில், வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொது […]

பதற்றம் நிறைந்த மாநிலமாக ‘மணிப்பூர்’ அறிவிப்பு! ஆளுநர் என்ன செய்யப் போகிறார்?

மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த  நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. […]

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! முக்கிய தகவல்கள்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் […]

திருப்பதிக்கு செல்கிறீர்களா? உடனே இதை கவனியுங்கள்!

ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் (செப்.28) அக்டோபர் 12ம் தேதிவரை ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தினந்தோறும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ‘‘சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாள பராமரிப்பு  பணிகள் […]