News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆசிய விளையாட்டு போட்டி! வில்வித்தையில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று தங்கப்பட்டியலில் 19வது தங்கத்தை பெற்று பதக்க மழையில் நனைந்து வருகிறது. சீனாவின் ஹாங்கோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்கத்தில் இருந்தே இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தங்களுடைய முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றனர்.  அந்த வகையில் இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் […]

இந்தியாவில் இத்தனை போலி பல்கலைக்கழகங்களா? யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இங்கு வழங்கப்படும் பட்டங்கள் எதுவும் செல்லாது என்றும் அதனால் எந்த வேலை வாய்ப்பையும் பெற முடியாது என்றும் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.     பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு பட்டங்களை வழங்குவதாக எங்களுக்கு தொடர் […]

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு! நாளை அண்ணாமலை ஆஜராவாரா?

டி.ஆர்.பாலு எம்.பி. தொடர்ந்து அவதூறு வழக்கில் நாளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு […]

உலகக்கோப்பை 2023: சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த கவுரவம்!

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் நோக்கில் அவரை உலகக்கோப்பை தொடரின் உலகளாவிய தூதராக நியமித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட் என்று சொல்பவர்களும், சச்சினை பார்த்துதான் கிரிக்கெட்டுக்கே வந்தேன் என்று பல கிரிக்கெட் வீரர்கள் சொல்வதும் நாம் பார்த்ததே. அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியுள்ளது. 2023 உலகக்கோப்பை தொடர் நாளை (அக்.5) முதல் நவம்பர் மாதம் 19ம் […]

இந்தியா- இலங்கை திடீர் ஒப்பந்தம்! என்னவென்று தெரியுமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, இந்தியாவுடன் மருந்து இறக்குமதிக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை அரசு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அங்குள்ள பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டனர். ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் மற்றொரு பக்கம் மருந்து, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் என சொல்ல முடியாத துக்கத்தில் தவித்து வந்தனர்.  அதை தவிர்க்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு […]

மத்திய அமைச்சரை சந்தித்தால் கூட்டணி என்று அர்த்தமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அமைச்சரை சந்தித்து பேசினால் கூட்டணியை பற்றி பேசினோம் என்று அர்த்தமாகிவிடுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்பதை தெளிவாக கூறிவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது 2 கோடி தொண்டர்களின் முடிவு […]

நிர்வாண படத்தில் நடித்தேனா? அமைச்சர் ரோஜா கண்ணீர் வீடியோ வைரல்!

நிர்வாண படத்தில் நான் நடித்தேன் என்றும் நான் கெட்டவள் என்றும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னனள் அமைச்சர் அவதூறு பரப்புகிறார் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க பேசிய வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணமூர்த்திக்கும் அமைச்சர் ரோஜாவுக்கும் இடையிலான போர் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இவர்களின் சண்டையால் ஆந்திராவில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியின் […]

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி! கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குருபூஜையில்  கலந்து கொள்ள உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.   கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கோஆதனூரில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.   இன்று நடைபெறும் விழாவுடன் சேர்த்து அதன் பின்னர் நடைபெற உள்ள […]

தேசிய மருத்துவ ஆணையை நிறுத்துங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிகளை வகுத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர்கள் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. […]

ஆசிய விளையாட்டு போட்டி! வில்வித்தை கலப்பு இரட்டையரில் தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வித்வித்தை கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளது. சீனாவின்  ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்களும், வீராங்கனைகளும் தங்களின் நாட்டின் பெருமையை காக்க அபாரமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் தங்களை எதிர்த்து […]