1.5 லட்சம் பெண்கள் மாயம்! பிரியங்கா காந்தி சொல்வது என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை 1.5 லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியபிரதேசம் மண்ட்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசும்போது, […]
அண்ணாமலையை கிண்டல் செய்த கே.எஸ்.அழகிரி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழக பா.ஜ.க. 9 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு, டெபாசிட் ஆவது வாங்குவீர்களா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் கடுமையாக உழைத்து வருகிறது. ஏற்கனவே தமிழக பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க. கட்சி அதிரடியாக வெளியேறி அதன் பலத்தை குறைத்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் […]
இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள்! Operation Ajay மத்திய அரசு அதிரடி!

இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து 4 முறை போர் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது கடந்த 6 நாட்களாக போர் […]
அமித்ஷா- சந்திரபாபு நாயுடு மகன் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் […]
காவிரி விவகாரம்! மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானம் அனுப்பி வைப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தில் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உச்சீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையறுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை கர்நாடக அரசு […]
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு! பின்னணி தகவல்கள்!

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் வேதனையடைந்த கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 5வது நாளாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் 3,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டிற்கு வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்றவர்களை அந்தந்த நாட்டினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கூகுள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா, டெல் அவிவ் பகுதிகளில் […]
1,000 குழந்தைகளுக்கு இலவசக் கல்வி! ஊபர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

ஊபர் நிறுவனம் இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ஓட்டுநர்களுடைய 1,000 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாகக் கொண்டு ஊபர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகைக் கார் சேவையை செய்து வரும் ஊபர் இந்தியாவில் தனது சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை கொண்டாடும் […]
‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இம்மாதம் 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் […]
திடீரென்று மொட்டையடித்துக் கொண்ட முதலமைச்சரின் மனைவி! முக்கிய பின்னணி!

சட்டமன்ற தேர்தலில் தனது கணவர் சந்திரசேகரராவ் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் அவரது மனைவி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்து கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு வருகிற நவம்பர் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் எதிரொலியாக நேற்று முன்தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மனைவி ஷோபா […]
தமிழக ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு! நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமா?

தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் 10 நாட்களில் தலா 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் மாளிகையிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 15ம் தேதி நவராத்தி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து […]

