News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்கள் மீட்பு! 2வது விமானத்தில் பயணம்!

இஸ்ரேலில் இருந்து 2வது விமானம் மூலம் 235 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதம் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு […]

மெத்தைக்கு அடியில் ரூ.42 கோடி பணம்! வருமானவரித்துறையினர் அதிர்ச்சி!

    காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர வீட்டு படுக்கை அறை மெத்தையின் கீழ் ரூ.42 கோடியை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களாகவே பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களையும், கணக்கில் வராத ரொக்கத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.   அந்த வகையில் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் ன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டிற்கு நள்ளிரவு […]

சோனியா காந்தியை புத்தகம் கொடுத்த வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

  தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் […]

2028 ஒலிம்பிக் தொடரில் இணைந்த கிரிக்கெட்! ரசிகர்கள் உற்சாகம்!

2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்தான். இப்போட்டித் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகவே இருந்து வந்தது. ஆனால் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட123 ஆண்டுகள் கழித்து தற்போது கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. […]

6,200 அடி உயர ஜாகேஷ்வர் கோவில்! பிரதமர் மோடி சாமி தரிசனம்! exclusive photos

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பித்தோராகர், உத்தரகாண்ட் பார்வதி குளத்தில் பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள மக்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடி கைகுலுக்கி, பெரியர்வகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.   பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள பார்வதி குளத்தில் சிவபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜாகேஷ்வர்  தாமில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். 6,200 அடி உயரத்தில் […]

இஸ்ரேலில் இருந்து 14 தமிழர்கள் சென்னை வருகை! அனைவரையும் மீட்போம்!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை வந்தடைந்துள்ள நிலையில் அனைவரையும் விரைவில் மீட்போம் என்று அமைச்சர்  மா.சுப்பிரமணியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகள் மோதல் சம்பவத்தால் இஸ்ரேலில் தங்கியுள்ள அயல்நாட்டினர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாட்டு அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.   அதன்படி இந்திய நாட்டின் மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 212 இந்தியர்களை பத்திரமாக விமானம் மூலம் மீட்டு தாயகம் […]

5 மாநில சட்டமன்ற தேர்தல்! இன்று வேட்பு மனுதாக்கல் தொடக்கம்!

வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் […]

ரூ.173 கோடி சொத்துக்கள் முடக்கம்! 2வது நாளாக லாட்டரி மார்ட்டின் வீட்டில் சோதனை!

லாட்டரி மார்ட்டின் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வருமானவரித்துறையினர் ரூ.173 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈடுடியதாகவும், சட்ட விரோதமாகவும் பணப்பரிமாற்றம் செய்ததாக கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் தொடர்ச்சியாக காந்திபுரத்தில் உள்ள மார்ட்டின் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய 4 இடங்களிலும் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று (அக்.13) […]

தாயகம் திரும்பிய 212 இந்தியர்கள்! திகிலூட்டும் இஸ்ரேல் நாட்கள்!

மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித்தவித்த 212 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் […]

உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் அழைப்பு!

உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அழைப்பு விடுத்துள்ளார். உடல் உறுப்புதானத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டில்  அதற்கான விழிப்புணர்வும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்புதானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்வோம் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இதனால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக […]