News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதலிடத்தில் முகேஷ் அம்பானி! பின்னடைவில் அதானி!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொழில் அதிபர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹுரன் இந்தியா மற்றும் 360 ஒன் வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்தபட்டியலின் படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.8.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்த இவரின் […]

ஒரு நாள் இங்கிலாந்து தூதரான சென்னை பெண்! குவியும் பாராட்டு!

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் இந்தியாவுக்கான ஒரு நாள் இங்கிலாந்து தூரக உயர் அதிகாரியான நிகழ்வு பாராட்டுகளை குவித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு நாள் தூதரக உயர் அதிகாரி என்ற போட்டியை நடத்தி வருகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரேயா தர்மராஜன் என்ற […]

தி.மு.க.வை எதிர்த்து அண்ணாமலை உண்ணாவிரதம்! என்ன விஷயம் தெரியுமா?

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க.வை எதிர்த்து வருகிற 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   அ.தி.மு.க. உடனா கூட்டணி முறிந்த பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார். பா.ஜ.க. தலைமையை சமாதானப்படுத்துவதற்காகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க.வை தூக்கி நிறுத்துவதற்காகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.   அந்த வகையில் அண்ணாமலை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

காவிரி விவகாரம்! டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் இவ்விவகாரத்தில் மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்தும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கடையடைப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 1 லட்சத்திற்கும் […]

சென்னையில் பா.ஜ.க. மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று கூடி தற்போது நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க. தனது கூட்டணியை முறித்துக் கொண்டது. இதற்கு  காரணம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைதான் என்றும், இனி கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார். அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை மத்திய நிதி […]

காவிரி விவகாரம்! கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூரில் 144 தடை உத்தரவு, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் என தொடர்ந்து கர்நாடக மாநிலம் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு நேற்றைய (அக்.9) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் […]

பா.ஜ.க.வுக்கு அடுத்த தலைவலி! முக்கிய தலைவர் ராஜினாமா!

பா.ஜ.க.வில் இருந்து பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு சாதியில் இருந்தும் முக்கியமான நபரை தனது கட்சிக்குள் இணைத்து பட்டியல் அணி தலைவராக நியமித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தற்போது பட்டியல் அணி துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தது அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் பெரிய சறுக்கல் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்டதில் இருந்து அக்கட்சிக்கு […]

பாலின, சாதி ரீதியாக தாக்கப்பட்டேன்! பெண் மந்திரி ராஜினாமாவில் பகீர் தகவல்கள்!

புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்த சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல்வேறு பகீர் காரணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரியில் சந்திர பிரியங்கா என்ற பெண் அமைச்சர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ள நிலையில், தனது ராஜினாமா கடிதத்தில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.   அதில், ‘‘என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கி உள்ள நிலையில் நான் இந்த கடிதத்தினை எழுதுகிறேன். […]

அக்.15ல் தேர்தல் அறிக்கை வெளியீடு! பரபரப்பான தெலுங்கானா!

தெலுங்கானாவில் வருகிற அக்டோபர் 15ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் சந்திரசேகரராவ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதால் அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று நேற்று (அக்.9) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவித்திருந்தார்.   மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி 30ம் தேதி […]

முக்கிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு! எங்கே தெரியுமா?

பூரி ஜெகந்நாதர் கோவிலில் வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த புராதன கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்குள் பக்தர்கள் கேமரா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும், கோவிலில் படம் எடுக்கவும் ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 1ம் தேதி […]