தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! எப்போது தெரியுமா?

வருகிற டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாம்பன் ரெயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி நாட்டப்பட்டது. இந்த பாலம் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மக்களுக்காக அதனை திறந்து வைத்து மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் […]
மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்- அமைச்சர் பொன்முடி!

மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாளை (நவ.2) மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘சுதந்திர போராட்ட வீரரும், மூத்த இடதுசாரித் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சங்கரய்யா தனது படிப்பை நிறுத்திவிட்டு […]
தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இன்று மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட 67வது ஆண்டை கொண்டாடி வருகின்றன. ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற தென் மாநிலங்களின் போராட்டங்கள் வலுத்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்தது. இதைத்தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற […]
தீபாவளி பண்டிகை! பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம். அதோடு நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகையின் போது […]
இலங்கை செல்லும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளையும் திறந்து வைக்க இருக்கிறார். அரசுமுறை பயணத்துடன் சேர்த்து இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களுக்கும் அவர் […]
சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் 100% உயர்வு!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இத்திருத்தக் கட்டண உயர்வு வருகிற 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு மற்றும் பழைய கட்டிங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானங்களும் மாநகராட்சி மன்றக் […]
மாலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! வீடியோ வைரல்!

பெங்களூர் லுலு மாலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்துமீறும் சில்மிஷக்காரர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவிட்ட வீடியோ தற்போது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ குறித்து அந்த பயனர் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள லுலு மாலில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் முதியவர் ஒருவர் இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டதை […]
Scam Alert : மின்வாரியம் சொல்வது என்ன?

மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்வாரியத்தை மையப்படுத்தி புதிதாக களைகட்டியுள்ள ஸ்கேம் பற்றி மின்வாரியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் மின் கட்டண நிலைப்பாடு குறித்து சரிபார்த்த பின்னர், நீங்கள் அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள். […]
2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வருகிற 2023ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈட்டுவோம் என்ற இலக்கை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். சென்னை பல்லாவரத்தில் சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை சென்னையில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி என்று கூறியதுடன் 2ம் கட்ட கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவை தொடங்க தமிழக அரசு […]
தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்!

தமிழகத்தில் ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யுமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த 29ம் தேதி மதக்கூட்டரங்கில் திடீரென்று டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழக மாநில உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை […]

