News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

டெல்லி காற்றுமாசு! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பாதிக்குமா? ஐ.சி.சி. ஆலோசனை!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லியில் வங்கதேசம் இலங்கை இடையிலான உலகக்கோப்பை தொடர் குறித்து நிபுணர்களிடம் ஐ.சி.சி. ஆலோசனை நடத்தி வருகிறது. உலகக்கோப்பை போட்டித் தொடருக்கான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்& இலங்கை அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இருநாட்டு அணிகளும் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஐ.சி.சி. வீரர்களின் நலன் குறித்து நிபுணர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் […]

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக சோதனை!

தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் கடந்த 3ம் தேதி வருமானவரித்துறையினர் தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி கடந்த 3ம் தேதி காலை தொடங்கிய சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி […]

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்! 21 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.   ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருகிற இம்மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் இதர பிற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.   ஒருபுறம் தேர்தல் பிரசாரத்துடன் சேர்த்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் […]

பாலியல் வன்கொடுமைக்கு பின் 3 துண்டுகளாக்கப்பட்ட பெண்! அதிர்ச்சி தகவல்!

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அவரின் உடலை 3 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் பெண்கள் தங்களின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு பயந்து பயந்து வாழும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்துள்ளது. தற்போது நடந்துள்ள கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநித்தில் அமைந்துள்ள பண்டா  கிராமம். இங்கு ராஜ்குமார் சுக்லா என்பவரின் வீட்டில் 40 வயதான தலித் பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த […]

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது யார்? டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது ஷாஜகான் இல்லை, ராஜா மான்சிங்கின் அரண்மனையைத்தான் அவர் சீரமைத்துள்ளார் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். கட்டிடக்கலைக்கே பெருமை, உலக அதிசயம், காதலர்களின் நினைவுச்சின்னம் என்று போற்றப்பட்டு வரும் தாஜ்மால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த கட்டிடம் முழுவதும் பளிங்கு கற்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டினார் […]

மேடையில் நடனமாடிய முதலமைச்சர்! தொண்டர்கள் உற்சாகம்!

கர்நாடக உதயநாளை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, நடனக்குழுவினருடன் இணைந்து நடமானடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   மைசூர் என்ற பெயர் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட 50வது ஆண்டு பொன்விழா கர்நாடகத்தில் களைகட்டியது. பொன்விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, விஜயநகர மாவட்டம் ஹம்பிக்கு நேற்று இரவு (நவ.2) சென்றிருந்தார்.   அங்கு விழா மேடையில் ‘வீர […]

தி.நகர் ரெசிடென்சி ஓட்டலில் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பாகி உள்ளது. தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற செய்தியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலான […]

உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி! என்ன செய்தார் தெரியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை ‘மை லார்டு’ என்று அழைக்காதீர்கள் என மூத்த வழக்கறிஞரை கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை பொதுவாக ‘மை லார்டு’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை நாம் பார்த்திருப்போம். இது ஆங்கிலேயர் காலத்தைய வழக்கம் என்பதால், இதனை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி இதற்கு தடை விதித்து கடந்த 2006ம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட […]

அரசு பள்ளிகளில் நாள்தோறும் நீட் பயிற்சி வகுப்புகள்! முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.   மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜே.இ.இ. எனும் பயிற்சியும் தேவைப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாமல் உள்ளதால், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து […]

விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலை! புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்!

புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று இலங்கையில் நடைபெற உள்ள மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவ பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்று தெரிவித்ததுடன், […]