News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார ஜாமீன் வழங்கிய ஆந்திர நீதிமன்றம்!

சிறையில் இருந்த தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது ஆந்திர நீதிமன்றம். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்தபடியே விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தில், சிறையில் இருக்கும் […]

டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது.   சென்னை நந்தனத்தில் டி.என்.பி.எஃப்.சி. (மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்) தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கினறன.   குறைவான வருமானவரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வருமானவரி சோதனையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.   […]

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளிட்ட 13 மசோதாக்கள் இன்றளவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மசோதாக்கள் குறித்த எந்த  நகர்வையும் ஆளுநர் மேற்கொள்ள […]

கடுமையாக உயர்ந்த வெங்காயத்தின் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வெங்காய வரத்து குறைந்துள்ளதாலும் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை கடும் உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மெல்ல மெல்ல தக்காளியின் விற்பனை விலை இயல்புநிலைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு […]

நின்று கொண்டிருந்த 10 பேருந்துகளில் திடீர் தீ! எங்கே தெரியுமா?

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலான சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில் தனியார் பேருந்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு இன்று திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அருகருகே நின்று கொண்டிருந்த அடுத்தடுத்த பேருந்துகளில் பற்றி எரிந்தது.  இதில் மொத்தம் 10 பேருந்துகள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகையுடன் காணப்பட்டதால் பொது மக்கள் […]

தேர்தல் பிரசாரத்தில் எம்.பி.க்கு கத்திக்குத்து! தெலுங்கானாவில் பரபரப்பு!

தேர்தல் பிரசாரத்தின் போது எம்.பி.யை மர்ம நபர் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தெலுங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் ஆட்சி செய்து வரும் நிலையில் 3வது முறையாக தானே முதலமைச்சராகிவிட வேண்டும் என்று ஆவேசமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பி.ஆர்.எஸ். கட்சியின் சார்பில் மேடாக் எம்.பி. பிரபாகர் ரெட்டி துப்பாக் […]

நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரா? மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக அதிகரித்து வரும் இளம் வயதினரின் மாரடைப்புக்கு காரணம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. இருப்பினும் பலர் நோய் தொற்றில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.     […]

சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை! தெலுங்கானாவில் பரபரப்பு!

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியினர் பின் வாங்கி இருப்பது கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் இணைவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.   இந்த சமயத்தில் தான் […]

கேரள ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்ற சர்வதேச மாநாட்டு மையத்தில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று கடைசிநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காலை 9.45 மணியளவில் தொடங்கிய இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, […]

ஆந்திரா ரெயில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் பலியான பயணிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்ட கண்டகப்பள்ளி ரெயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று (அக்.29) ராயகடா நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் கேபிள் பிரச்சினை காரணமாக இயக்கப்படாமல் நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே  ஊழியர்கள் பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த வழியாக […]