துரை உதயநிதிக்கு கொலை மிரட்டல்..? உண்மை காரணம் இது தானா..?

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தற்போது வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படும் விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்பட தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்திருக்கும் துரை தயாநிதிக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் வசித்துவந்த […]
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதவி பறிப்பு..? ஜெயலலிதா, உதயநிதி சர்ச்சை பேச்சு.

ஆபாசமாகப் பேசுவதில் தி.மு.க. அமைச்சர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எதிராக அ.தி.மு.க.வினரும் தி.மு.க. இளைஞர் அணியினரும் கொதித்துப் போயிருக்கிறார்கள். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘’நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவாங்க; ஆனா, அவங்களுக்கு அறிவு இருக்காது. அதெல்லாம் எம்.ஜி.ஆரோடு போய்விட்டது. எம்.ஜி.ஆரை வைச்சிருந்ததாலே ஜெயலலிதா அரசியலுக்கு வர முடிந்தது’ என்று கொச்சையாகப் பேசினார். இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயல் வீசியிருக்கிறது. இதுகுறித்து அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் ராஜ் சத்யன், ‘’உலகத் தமிழர்கள் அனைவரும் […]
அதானி – மாதாபி பூரி கூட்டுச்சதி பூகம்பம்..? ஹிண்டன்பர்க் அறிக்கையை வேடிக்கை பார்க்கும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை.

கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச் சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஓர் அறிக்கை வெளியிட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடுத்துக்கொண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. சிபிஐ அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்பம் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க். அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் […]
பெண் பயிற்சி மருத்துவர் கொலை! பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் அம்பலம்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் இருந்து முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அரை நிர்வாணமாக கிடந்த பெண் மருத்துவரை பார்த்த சக மாணவ, மாணவிகள் உடனடியாக இது குறித்து […]
வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்! வலுக்கும் ஆதரவு!

33வது ஒலிம்பிக் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் இந்திய மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகாட் தனக்கு நடந்த அநீதியால் அதிருப்தியடைந்து ஓய்வை அறிவித்தார். பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கியூபா நாட்டு வீராங்கனையை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தார். கடந்த 8 மணி நேரத்தில் 3 சர்வதேச வீராங்கனைகளை வெற்றி கண்ட வினேஷ் போகாத் அமெரிக்க […]
வி.ஜே.சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேம்நாத்துடன் விடுவிக்கப்பட்ட 7 பேர்!

சின்னத்திரை நடிகையும் விஜேவுமாக இருந்த சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சித்ரா, கோழை கிடையாது. அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கருத்து தெரிவித்தனர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த […]
பொன் மாணிக்கவேல் கைது செய்யப்படுவாரா? வீட்டில் சி.பி.ஐ. விசாரணை

சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மாஜி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். பொய் வழக்கு பதிவு செய்து சிலைக் கடத்தல் பிரிவு முன்னான் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அது என்ன வழக்கு..? விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலப்பட்டியில் கடந்த 2008-ல் ஆரோக்கியராஜ் என்பவர் விவசாய நிலத்தில் ஆறு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை […]
பத்து நாட்கள் கழித்து வயநாட்டில் பிரதமர் மோடி. பேரிடர் நிதி எவ்வளவு?

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள நாட்டுக்கு பத்து நாட்களுக்குப் பிறகு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பேரிடரை நேரில் பார்த்து தேசியப் பேரிடராக அறிவித்து நிதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். […]
உதயநிதியின் கார் பந்தயத்துக்கு மீண்டும் ஆப்பு..? உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தியே தீரவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடத்த இருந்த ரேஸ் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு இம்மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ரேஸ் கார் பந்தயம் விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடுத்துள்ளது. இதனை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் […]
சுதந்திர தினம்: பிரதமர் மோடி மக்களுக்கு புது வேண்டுகோள்!

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு எக்ஸ் பக்கம் வாயிலாக புது கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வியாழக்கிழமை சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார், அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கிய வேண்டுகோள் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக […]

