News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய். ஸ்டாலினின் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆரம்பம்.

மாணவிகளுக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாய் கொடுக்கிறீர்கள், எங்களுக்கு இல்லையா என்று கேட்ட மாணவர்களுக்காகவே தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆரம்பமாகிறது என்று கோவையில் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் அவர் பேசுகையில், ‘’எல்லா மாணவர்களும் உயர்கல்வி படிக்கனும், நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டும், இதுதான் என்னுடைய கனவு மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது, அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய நான் இருக்கிறேன், திராவிட மாடல் அரசு இருக்கிறது’ என்று […]

அண்ணாமலை சொன்னது என்னாச்சு..? மீண்டும் தமிழக மீனவர்கள் கைதுக்கு கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நியாயம் கேட்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மீனவர்களை அழைத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 16ம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது […]

பால் கனகராஜ் சம்மனுக்கு ஆஜர். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த கைது பா.ஜ.க. நிர்வாகி..?  

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியே இன்னமும் நீங்காத நிலையில், பா.ஜக.வின் வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகி இருப்பது கிடுகிடு திருப்பமாக கருதப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக அஞ்சலை, அதிமுக மலர்கொடி உள்ளிட்ட 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் […]

சவுக்கு சங்கரின் உக்கிரத் தாக்குதல் மீண்டும் ஆரம்பம்..? குண்டர் சட்டம் ரத்து

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மற்ற வழக்குகளிலும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில் சவுக்கு சங்கர் வெளியே வரப்போகிறார், முன்பை விட வீரியமாக அவரது தாக்குதல் இருக்கும் என்று ஆதரவாளர்கள் வரவேற்புக்குத் தயாராகி வருகிறார். பெண் போலிசார் குறித்து அவதூறாக பேசியதாக யூட்டியூபர் சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், […]

இங்கிலாந்து கலவரத்தால் அண்ணாமலை படிப்பு அரோகரா..? குஷியில் தி.மு.க.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. எனவே, அவரை மாற்ற வேண்டும் என்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இம்மாதம் இறுதியில் அண்ணாமலை இங்கிலாந்து நாட்டுக்குப் படிக்கச் செல்வதாகவும் அதுவரை இடைக்காலத் தலைவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்படுவதற்கு விரும்புகிறார். எனவே, இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தை சுட்டிக்காட்டி படிப்பை […]

பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்!

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 10ம் தேதி வயநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார்.   கடந்த 30ம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தது. அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.   இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினன் மேற்கொண்டுவரும் […]

தாயின் நகைகளை திருடிய 9ம் வகுப்பு மாணவன்! என்ன செய்தான் தெரியுமா?

காதலியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட 9ம் வகுப்பு மாணவன் செய்த காரியம் டெல்லி போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.    கடந்த 3ம் தேதி (ஆகஸ்ட்) டெல்லி நஜாப்நகரை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் இருந்த நகைகள் காணவில்லை என்று டெல்லி போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.      அதாவது தனது வீட்டில் இருந்த 2 தங்க சங்கிலிகள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரம் காணாமல் போனதாக அந்த புகார் மனுவில் […]

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னொரு அவமானம். வீரர்களை விட அதிக அதிகாரிகள் அனுப்பப்பட்ட கொடுமை.

வினேஷ் போகத் விவகாரத்தின் காயமும், வேதனையும் ஆறுவதற்குள்  மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவருடனான ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. அதேநேரம், வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் பிற ஊழியர்கள் அனுப்பப்பட்ட தகவலும்ம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கடந்த  டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்தியா செலவளித்த தொகை 13.13 கோடி ரூபாய். இந்த பாரீஸ் போட்டிகளுக்கு 33.68 கோடி ரூபாய். இதில் வேதனை என்னவெனில், இந்தியாவின் சார்பில் சென்ற விளையாட்டு வீரர்களின் […]

வினேஷ் போகாட் ஓய்வு அறிவிப்பு. சதி செய்தது அம்பானியின் டாக்டரா?  

நூறு கிராம் எடை வித்தியாசம் காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற முடியாமல் போனதுடன், வெள்ளிப் பதக்கமும் பறிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், அவரது சதிக்குக் காரணம் என்று அம்பானி மருத்துவமனையின் டாக்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வினேஷ் போகட், “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு […]

காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்கள்! தேர்தல் தேதி அறிவிப்பு!

செப்டம்பர் மாதம் 3ம் தேதி காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மத்திய மந்திரிகளான பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கிடையில் தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.   இதன் காரணமாக மராட்டியம், மத்தியபிரதேசம், அசாம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் […]