News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அதானி –  மாதாபி பூரி கூட்டுச்சதி பூகம்பம்..? ஹிண்டன்பர்க் அறிக்கையை வேடிக்கை பார்க்கும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை.

கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச் சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஓர் அறிக்கை வெளியிட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடுத்துக்கொண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. சிபிஐ அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்பம் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க். அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் […]

பெண் பயிற்சி மருத்துவர் கொலை! பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் அம்பலம்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் இருந்து முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அரை நிர்வாணமாக கிடந்த பெண் மருத்துவரை பார்த்த சக மாணவ, மாணவிகள் உடனடியாக இது குறித்து […]

வி.ஜே.சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேம்நாத்துடன் விடுவிக்கப்பட்ட 7 பேர்!

சின்னத்திரை நடிகையும் விஜேவுமாக இருந்த சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சித்ரா, கோழை கிடையாது. அவர் தற்கொலை  செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கருத்து தெரிவித்தனர்.   தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த […]

பொன் மாணிக்கவேல் கைது செய்யப்படுவாரா? வீட்டில் சி.பி.ஐ. விசாரணை

சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மாஜி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். பொய் வழக்கு பதிவு செய்து சிலைக்  கடத்தல் பிரிவு முன்னான் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அது என்ன வழக்கு..? விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலப்பட்டியில் கடந்த 2008-ல் ஆரோக்கியராஜ் என்பவர் விவசாய நிலத்தில் ஆறு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை […]

அண்ணாமலை சொன்னது என்னாச்சு..? மீண்டும் தமிழக மீனவர்கள் கைதுக்கு கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நியாயம் கேட்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மீனவர்களை அழைத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 16ம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது […]

பால் கனகராஜ் சம்மனுக்கு ஆஜர். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த கைது பா.ஜ.க. நிர்வாகி..?  

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியே இன்னமும் நீங்காத நிலையில், பா.ஜக.வின் வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகி இருப்பது கிடுகிடு திருப்பமாக கருதப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக அஞ்சலை, அதிமுக மலர்கொடி உள்ளிட்ட 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் […]

சவுக்கு சங்கரின் உக்கிரத் தாக்குதல் மீண்டும் ஆரம்பம்..? குண்டர் சட்டம் ரத்து

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மற்ற வழக்குகளிலும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில் சவுக்கு சங்கர் வெளியே வரப்போகிறார், முன்பை விட வீரியமாக அவரது தாக்குதல் இருக்கும் என்று ஆதரவாளர்கள் வரவேற்புக்குத் தயாராகி வருகிறார். பெண் போலிசார் குறித்து அவதூறாக பேசியதாக யூட்டியூபர் சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது அஸ்வத்தாமன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். யார் இந்த அஸ்வத்தாமன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.   கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் தனதுவீட்டு கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கட்சி பிரமுகர் என்ற அடையாளத்தையும் […]

பாலியல் கைதியாக சிக்கியிருக்கும் பிரபல தமிழ் நடிகை.! அதிரவைக்கும் துபாய் செக்ஸ் ராக்கெட்

கலைநிகழ்ச்சி என்ற பெயரில் துபாய்க்கு அழைத்துச்செல்லப்பட்ட பிரபல தமிழ் நடிகை நட்சத்திர ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டிருப்பதாகவும், அவரை மீட்கும் முயற்சியில் தமிழக காவல் துறை இறங்கியிருப்பதாக வரும் தகவல் கோடம்பாக்கத்தை அலற விட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறைக்கு கடந்த மே 29ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மூலம் புகார் ஒன்று வந்தது. அதில், துபாயில் சட்டவிரோதமாக கலை நிகழ்ச்சி என்று நடிகைகள் மற்றும் நடன கலைஞர்களான இளம்பெண்களை அழைத்து சென்று […]

போலி பேராசிரியர்களை பிடிச்சு ஜெயிலில் போடுங்க. சீமான் ஆவேசம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் ஊழலை அறப்போர் இயக்கம் அம்பலபடுத்தியிருந்தது. இதனை கண்டறிய குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாம் தமிழர் சீமான், ‘’அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து கிடப்பில்போட்டுள்ள திமுக அரசின் மெத்தனப்போக்கு […]