News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

3 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்..? போக்சோ சிவராமனுக்கு ரகசிய நிதி வழங்கிய சீமானுக்கு எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக இருந்த சிவராமன் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில் சிவராமன் மனைவிக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து தற்போது ரகசியமாக நிதி உதவி அளிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி உலாவருகிறது. இந்த் செய்தி அந்த கட்சியினரிடமே கரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவராமன் என்.சி.சி. முகாமில் வைத்து சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் என்.சி.சி. சார்பில் எந்த முகாமும் நடத்தப்படவில்லை என்று செய்தி வெளியாகியிருக்கிறது. […]

கவிஞர் சினேகாவை துவம்சம் செய்யும் தம்பிகள். ஆபாச சண்டையை தூண்டிவிடும் சிறுத்தைகள்

  திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் கவிஞர் சினேகா வாசித்த ஒரு கவிதைக்கு எதிராக சீமானின் அன்புத் தம்பிகளும் ராமதாஸின் அருமைத் தொண்டர்களும் விதவிதமாக கெட்ட வார்த்தைகளில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் சினேகாவை வறுத்தெடுக்கிறார்கள். விழா மேடையில் அவர் படித்த கவிதை இது தான். செங்கோல் பிடித்து ஆண்ட பரம்பரை என அடித்தொண்டையில் கத்துவார் ! மறுபக்கம் உள் ஒதுக்கீடு வேண்டும் என அரசின் கால் பிடித்து சுற்றுவார்! கொள்கை ஏதுமில்லா […]

வசமாக சிக்கிய தில்லுமுல்லு தேவநாதன். அப்ரூவரானால் அண்ணாமலைக்கும் ஆபத்து..?

பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். 50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர். இவர் கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் இவரிடம் பெரும் நிதி வாங்கிக்கொண்டே தேர்தலில் நிற்க அண்ணாமலை அனுமதி கொடுத்ததாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் […]

சவுக்கு சங்கருக்கு நல்ல நேரமடா… கை கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி?

இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் சிக்கியிருக்கும் சவுக்கு சங்கருக்கு சவுக்கு சங்கருக்கு மீண்டும் இடைக்கால நிவாரணம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். அனைத்து வழக்குகளிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சவுக்கு சங்கர், ‘என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு தி.மு.க அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது” என்று ஆவேசம் காட்டினார். இதையடுத்து […]

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் போலீஸ் எஸ்.ஐ.

தப்பிச்சென்ற பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.யின் துணிகர செயலை சென்னை காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினார்.   ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி வருகின்றனர்.   அந்த […]

விஜய் கட்சியின் ஆரம்பமே கத்திக்குத்து. சினிமா பாணியில் அடிதடி, பஞ்சாயத்து

தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சியிலும் பதவி வாங்குவதற்கும் தங்கள் எல்லையை ஆட்சி புரியவும் பெரிய அக்கப்போரே நடக்கும். இந்த விவகாரத்தில் அவ்வப்போது எல்லை மீறி கொலை நடக்கும். ஆளும் தி.மு.க. உட்கட்சி பூசலுக்கு அதிகாலை வாக்கிங் படுகொலை படு ஃபேமஸ். இந்த நிலையில் இன்னமும் கட்சிக்கு கொடியைக் கூட அறிமுகம் செய்யாத நிலையில் நடிகர் விஜய்யின் கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல் நடந்திருப்பதும் கத்திக்குத்து நடந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் படங்களில் வன்முறை கொடி […]

செந்தில் பாலாஜி ரிலீஸுக்கு உதயநிதியின் துணை முதல்வர் பதவி வெயிட்டிங்… செம அரசியல் கணக்கு

  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை உதயநிதி தலைமையில் வெல்வதற்கு தி.மு.க. அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதனாலே துணை முதல்வர் பதவி வழங்கப்படும் முடிவில் இருக்கிறார்கள். வரும் 19ம் தேதி பதவியேற்பு விழா இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், செந்தில்பாலாஜி வெளியே வந்ததும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் நேரத்தில் தான் உதயநிதிக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் சமீபத்தில் டெல்லி அமைச்சர் மனீஷ் சிசோடியாவுக்கு கிட்டத்தட்ட 17 […]

கோர்ட்டாவது கூந்தலாவது…. சவுக்கு சங்கருக்கு அடுத்த ரவுண்ட் குண்டர் சட்டம்.

பெண் போலீஸார் மீது அவதூறு குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பியதான குற்றச்சாட்டில் தான் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் […]

அதானி விவகாரத்தில் மோடிக்கு ராகுல் நெத்தியடி. பதறும் பா.ஜ.க. பதிலடி

அதானி விவகாரம் என்றாலே ராகுலுக்கு அல்வா சாப்பிடுவது போல் இனிப்பானது. இப்போது, அவருக்கு வசமாகச் சிக்கியிருக்கிறது ஹிண்டர்பர்க் அறிக்கை. அதானி பணப் பரிமாற்ற ஊழலில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதாபி பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. மேலும், “அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை’’ என்றும் கூறியிருக்கிறது. இந்த விவகாரம் நாடு முழுக்க புயல் எழுப்பியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வினர் மட்டும் […]

ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அணுகுண்டு அட்டாக். மாதாபி தப்பிக்க வழியே இல்லை

அதானி குழுமத்துக்கும் செபி தலைவர் மாதாபி பக் மற்றும் அவரது கணவருக்கும் இடையிலான முதலீடு குறித்து அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டு அலற விட்டுள்ளது. அதன்படி, அமைப்பான செபியின் தலைவர் திருமதி மாதாபி பக் மீதும் அவரது கணவர் தவால் பக் ஆகிய இருவரும் IIFL IPE Plus Fundல் இவர்கள் இருவரும் முதலீடு செய்துள்ளார்கள். இதில் முதலீடு செய்யச் சொன்னது அனில் அகுஜா, அவர் அதானி குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவர். இந்த […]