News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மாமல்லபுரத்தில் விபரீதம்: கார் மோதி 5 பெண்கள் பலி

மாமல்லபுரம் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள், கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு ஈ.சி.ஆர். பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் பெண்கள் கூட்டம் கூட்டமாக மாடு மேய்த்து செல்வது வழக்கம். அதன்படி இன்று (நவம்பர் 27) மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் அமர்ந்தபடி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 […]

பள்ளியில் பூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த சோகம்! என்ன நடந்தது தெரியுமா?

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு நேரத்தில் பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா புறநகர பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் வீரேன் ஜெயின் என்ற 6ம் வகுப்பு மாணவன் பயின்று வந்தான். வழக்கம் போல் மதிய உணவு நேரத்தில் வீரேன் ஜெயின் தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த பூரியை சாப்பிட ஆரம்பித்தான். அதாவது தான் கொண்டு வந்த 2 பூரிகளையும் ஒன்றாக சுருட்டி சாப்பிட்டுள்ளான். […]

ஸ்டாண்ட் வித் அதானி… முட்டுக்கொடுக்கும் மோடியின் வைரல் ஹேஸ்டேக்

உலகம் முழுக்க அதானியின் ஊழல் நாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், பா.ஜ.க.வினர் மட்டும், ‘ஸ்டான் வித் அதானி’ என்று ஒரு ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகிறார்கள். அதாவது, இது அதானி மீதான தாக்குதல் இல்லையாம், இந்திய தொழிலதிபர் மீது தாக்குதல் ஆகவே, இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க.வினர், ‘’ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தமிழ்நாடு, சட்டிஸ்கர், ஆந்திரா,ஒடிஸா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மின்சார கொள்முதலில் அந்தந்த மாநில அரசுகளோடு […]

தஞ்சாவூர் ஆசிரியை கொலை: குடும்பத்திற்கு சென்று சேர்ந்த நிவாரணம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக 26 வயதான ரமணி என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவம்பர் 20) ரமணி பள்ளி வளாகத்தில் இருந்த போது மதன்குமார் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரை […]

மோடியின் நண்பர் அதானி கொடுத்த லஞ்சம் 21,10,19,25,675 ரூபாய். போட்டு உடைக்கும் அமெரிக்கா

நண்பர் அதானிக்காகவே பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி நடத்திவருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்திய அரசின் அத்தனை சொத்துக்களும் அதானிக்கு எழுதி வைக்கப்படுகின்றன, அனைத்து நாட்டிற்கும் பயணம் செய்து அதானிக்கு ஆதாயம் திரட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோடியின் நண்பர் என்று கருதப்படும் டொனால்ட் டிரம்ப் நாட்டில் மோட்டியின் இன்னொரு நண்பர் அதானிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் மோசடி செய்ததாக இந்திய கோடீஸ்வரர் […]

அரசுப்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டதின் பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. இவருக்கு 26 வயது . இந்த நிலையில் ரமணி வழக்கம்போல் இன்று (நவம்பர் 20) வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது திடீரென வகுப்பறைகுள் நுழைத்த நபர், ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார் . இதில் நிலைகுலைந்து போன ஆசிரியை ரமணி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

கஸ்தூரிக்கு ஆஜராகும் நீதிபதியின் மனைவி. அப்போ சட்டம் எல்லோருக்கும் சமம் இல்லையா?

கஸ்தூரி சிறையில் மினரல் வாட்டர் குடிக்க முடியாமல், கொசுக்கடியால் அவதிப்படுகிறார் என்றதும் அவருக்கு ஆதரவாக நீதிபதியின் மனைவியே பரிந்துரைக் கடிதம் எழுதும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி, ‘’நடிகை கஸ்தூரியின் ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும். கஸ்தூரிக்கு ஆட்டீசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளது. சிறப்புக் குழந்தையை வளர்க்க கஸ்தூரி தனி ஆளாகப் போராடி வருகிறார்’’ என்று குரல் கொடுத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘’ஆட்டிசம் […]

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் யானை மிதித்து யானைப்பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உதயா என்ற பாகன் அங்கிருக்கும் தெய்வானை என்ற பெண் யானைக்கு பாகனாக இருந்து அதனை பராமரித்து வருகிறார். இந்நிலையில் யானைக்கு பழம் கொடுக்க வந்த போது பாகன் உதயாவையும் அவருடன் வந்தவரான உறவினரான கிருஷ்ணபாலன் என்பவரை தெய்வானை யானை 2 பேரையும் […]

ஜாபர் சாதிக்கின் விறுவிறுப்பான போதை ரூட். சிக்கப்போகும் தி.மு.க. முக்கியப் புள்ளிகள்

போதை பொருட்கள் அனுப்பியதில் கிடைக்கும் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சினிமா நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்திற்கும் இவரது முதலீடு அதிகம் என்று சொல்லப்படுகிறது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் என்.ஆர்.ஐ. வின் தலைவரும், போதை மருந்து கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக் மற்றும் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் […]

நான்காவது முறையாக அமலாக்கத்துறை ரெய்டில் ஆதவ் அர்ஜுனா. அடுத்தது திருமாவளவன்..?

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதோடு ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடக்கிறது. ஆதவ் அர்ஜுனா […]