News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திரிஷா விவகாரம்! போலீஸ் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்!

திரிஷா விவகாரம் குறித்து நேரில் ஆஜராக நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று 2.30 மணியளவில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.   நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தென்னிந்திய நடிகர் சங்கம், திரையுலகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் என அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நான் பேசியதை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக […]

தொண்டை வலி சிகிச்சை எடுத்து வருகிறேன்! மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்!

நடிகர் தனக்கு தொண்டை வலி இருப்பதால் பேச மிகவும் சிரமமாக இருப்பதால் நாளை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு ஆயிரம் விளக்கு போலீசாருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

ஒரு போலீஸ்காரர் உட்பட 3 பேர் பலி! பதற்றத்தில் பஞ்சாப்!

குருத்வாராவை கைப்பற்றுவதில் ஏற்பட்ட மோதலில் சீக்கியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வார் அமைந்துள்ளது. இதனை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டதால் நிஹாங் சீக்கியர் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் ஒரு போலீஸ்காரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   […]

பிரபல நடிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

பிரபல நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஜெயப்பிரதா என்றால் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சலங்கை ஒலி திரைப்படம்தான் பலரது நினைவுக்கு வரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஜெயப்பிரதா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலும் தசாவதாரம் திரைப்படத்தில் கேமியோ […]

கல்லூரி மாணவர் ரேகிங் விவகாரம்! 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ராகிங் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.     ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த […]

சென்னையில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது! முழு விவரம் உள்ளே!

சென்னையில் கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை (நேற்று) மொத்தம் 588 பேர் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பல்வேறு குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு […]

பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம்! கைதானவர் டி.டி.எபு.வாசனின் விசிறி என தகவல்!

பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்த மணிகண்டன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யூடியூபர் டி.டி.எப். வாசனின் விசிறி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.   திருச்சியில் இளைஞர்கள் சிலர் அடிக்கடி பைக் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. அதிவேகமாக வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டு கெத்து காட்டி திரிந்து வந்துள்ளனர். இது குறித்த பல முறை போலீசார் […]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! லண்டனில் சோகம்!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் லண்டனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை கடந்த 12ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டினரும் கோலாகமாக கொண்டாடினர். அதேபோல் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினரும் தீபாவளி பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடினார்கள். தீபாவளி பண்டிகையன்று இரவு 10.30 மணியளவில் இவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு 2 […]

பெட்ரோல் குண்டுவீச்சு! ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.   சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாளிகையான ராஜ்பவன் மீது கடந்த 25ம் தேதி ரவுடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கருக்கா வினோத்தை பிடித்து அவரிடம் இருந்த மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.   அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய […]

பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை! கேரளாவில் பரபரப்பு!

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.   கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் புலம் பெயர் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் இவரது 5 வயது மகளை அசஃபக் அலாம் என்ற இளைஞர் சாக்லேட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தான். சிறுமியின் பிரேத […]