தில்லுமுல்லு துணைவேந்தருக்கு அதற்குள் ஜாமீனா….?

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்றாலும், இந்த பதவியை வைத்துக்கொண்டு தனியே ஒரு கல்வி நிறுவனமே நடத்தியதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனாலும், தன்னுடைய மேலிடத் தொடர்புகள் மூலம் தப்பிக்கொண்டே இருந்தார். துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் […]
எடப்பாடிக்கு திகார் ஜெயில் உறுதி..! பன்னீரிடம் சி.பி.ஐ. விசாரணை?

வானகரத்தில் எடப்பாடி தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்த அதே நேரத்தில், முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம், கோவையில் அவரது ஆதரவாளர்களுடன், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு’ என்ற பெயரில் ஒரு போட்டிக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ‘”சாதாரண தொண்டனாக இருந்த நான், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதல்வராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் […]
புதிய கிரிமினல் சட்டங்களுக்கு ஜனாதிபதி அவசர ஒப்புதல்…. கொடூர சட்டம் என்று எதிர்க்கட்சிகள் ஆவேசம்

நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சஸ்பெண்ட் செய்து வெளியே அனுப்பிவிட்டு, பா.ஜ.க. கொண்டுவந்த கொடூரமான கிரிமினல் சட்டங்களுக்கு ஜனாதிபதி திருவுபதி முர்மு அவசரமாக ஒப்புதல் கொடுத்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1898) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (1872) ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா […]
உதயநிதியின் சனாதனத்துக்கு அடுத்து தயாநிதி மாறனின் கழிவறை பேச்சு – ஆட்டம் காணும் இந்தியா கூட்டணி

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தயாநிதி மாறனின் பழைய வீடியோ பேச்சு இப்போது வைரலாகிவருகிறது. அதாவது, ’உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களில் இந்தி மொழி மட்டும் கற்றவர்கள், எங்களுடைய தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’ என்று பேசியிருந்தார். இது இப்போது இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. தமிழக தலைவர்கள் பேசும் பல விவகாரங்கள் இந்திய அளவில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. சமீபத்தில் […]
மாணவனுடன் ரகசிய தனிக்குடித்தனம்… செக்ஸ் வழக்கில் ஆங்கில ஆசிரியை

டீன் ஏஜ் பருவத்தில் ஆசிரியர் மீது பெண் பிள்ளைகளுக்கும் ஆசிரியை மீது பையன்களுக்கும் ஈர்ப்பு வருவது இயல்பான விஷயமே. எல்லோருமே இந்த கட்டத்தை கடந்தே வந்திருப்பார்கள். ஒருசில பிள்ளைகள் இதில் எல்லை மீறும்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியரும் ஆசிரியையும் அவர்கள் தலையில் கொட்டு வைத்து ஹார்மோன் லீலைகளை புரிய வைப்பார்கள். ஆனால், காதலை சொன்ன மாணவனுடன் ஆசிரியை ஓடிப்போனதும், ரகசியமாக தனிக்குடித்தனம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது போக்ஸோ வழக்கில் ஆசிரியை சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, சோழிங்கநல்லூரில் […]
’செக்ஸ் வீடியோ அண்ணாமலை..’ எல்லை மீறும் தி.மு.க. ஐ.டி.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உதயநிதி பற்றி ஒரு வில்லங்கமான ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு எதிர்வினையாக இன்று செக்ஸ் வீடியோ அண்ணாமலை என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் தி.மு.க. ஐ.டி. விங் டிரெண்டிங் ஆக்கியிருக்கிறது. வெள்ளப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றதுமே அமைச்சர் உதயநிதி தென் தமிழகத்திற்கு வந்து இரவும் பகலுமாக மீட்பு நடவடிக்கை எடுத்துவருகிறார். லேட்டாக நெல்லை வெள்ள பாதிப்பை பார்வையிடப் போன அண்ணாமலை, ’உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது… ஏன் துரைமுருகன் மீட்பு […]
செந்தில் பாலாஜிக்கு அடுத்து ஜெயிலுக்குப் போகிறாரா பொன்முடி..? காரிலிருந்து தேசியக்கொடி அகற்றம்

அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என்று தி.மு.க.வினர் தலைகீழாக நின்றும் முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் சூழல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு தி.மு.க.வினர் அரண்டு போயிருக்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் […]
ஓடி ஒளியும் போதைப்பொருள் குற்றவாளிகள்… அதிரடி வேட்டையில் 148 பேர் கைது…

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுஜ் பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுக்க அதிரடி வேட்டை நடத்திவருகிறார்கள். அதன்படி நவம்பர் 29 தேதி முதல் டிசம்பர் 23 வரையிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, 886 கஞ்சா, 1 கிலோ மெத்தகுலோன், 100 டைடோல் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரன், […]
மாணவர்களை மயக்கும் ஹூக்கா பார்ட்டிகளை விரட்டி விரட்டி கைது செய்த போலீஸ்

சென்னையில் கல்லூரி மாணவ, மாணவியர்களை குறி வைத்து ஹூக்கா பார் ரகசியமாக இயங்கி வருகின்றன. இந்த தகவல் தெரியவந்ததும், சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்யும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கபப்ட்டு தேடுதல் வேட்டை நடந்தது. நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவுக்குக் கிடைத்த ரகசிய தகவல்கள் […]
அட்டை பெட்டியில் கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்! அதிர்ச்சி தகவல்கள்!

சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டிக்குள் வைத்து கொடுத்த விவகாரம் தொடர்பாக பிணவறை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ததோடு, லஞ்சம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுவது பொய் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மசூத், சவுமியா தம்பதிக்கு கடந்த 5ம் தேதி குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து மசூத், குழந்தையின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று (டிச.10) குழந்தையின் உடலை […]

