சென்னையில் 6,000 ரவுடிகளுக்கு செக்! புது கமிஷனர் அதிரடி!

சென்னையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 6,000 ரவுடிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரின் வீடு தேடிச் சென்று அவர்களை நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் ரவுடிகள் அராஜகம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து பல உயர் போலீஸ் […]
சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடமாற்றம்! யார் இந்த அருண்!

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 8ம்தேதி) திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக புதிய ஆணையராக ஏ.டி.ஜி.பி. அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக முதலில் 8 பேர் பின்னர் 3 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை […]
நள்ளிரவில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம். சீமான் இப்படிச் சொல்லிட்டாரே

கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது படுகொலை விசாரணை குறித்து சீமான் கூறியிருக்கும் கருத்து கடும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வசித்து வந்த பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. ஏரியாவைச் சேர்ந்த பொதுமக்கள், கட்சியினர், ஆதரவாளர்கள் […]
ஆம்ஸ்ட்ராங் உடலை புதைப்பதில் என்ன பிரச்னை..? நீதிமன்ற உத்தரவு வந்தாச்சு

கருணாநிதி உடலை பொது இடமான மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்றால் ஆம்ஸ்ட்ராங்கை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்வதில் என்ன பிரச்னை என்று அவரது ஆதரவாளர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் திருமுருகன் காந்தி, ‘’தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது உடலை அவரது சொந்த நிலத்தில், அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி இதுவரை தராமல் ஏன் திமுக அரசு காலம் தாழ்த்துகிறது? அரசு மருத்துவமனையில் காவல்துறையை குவித்து இந்த துயரமான சூழலில் எதை சாதிக்க நினைக்கிறது திமுக […]
சி.பி.ஐ.க்குப் போகிறதா ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..? கொலையாளிகளுக்கு என்கவுண்டர்..?

பகுஜன் சமாஜவாதியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. அவரது உடற்கூராய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்ற வேண்டும், அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம், மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல் தீவிர […]
விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள்! பிரேமலதா எச்சரிக்கை!

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழகமே திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக அரசு இறுதி மரியாதையுடன் அவரது உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வெறும் 4ஆயிரத்து சொச்ச்ம வாக்கு […]
தங்க கடத்தலில் அண்ணாமலைக்குத் தொடர்பு..? லண்டன் பயணத்துக்குச் சிக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியை சந்தித்த அண்ணாமலையை தமிழகத்தில் இருந்து அனுப்புவதற்கு திட்டமிட்டு லண்டன் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் நெருங்கிய கூட்டாளி தங்கக் கடத்தலில் சிக்கியிருப்பதை அடுத்து அண்ணாமலைக்கும் சிக்கல் வரும் என்றும் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை போடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள், பொம்மை […]
போலே பாபாவின் காலடி மண்ணுக்கு 120 உயிர்கள் பலி. ஹத்ராஸ் பரிதாபம்.

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணை எடுக்க வேண்டும் என்று முண்டியடித்த கூட்டம் ஒருவர் மீது ஒருவர் விழுந்து 120க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவில் மேம்படாத தேசம் இப்படித்தான் இறந்துகொண்டிருக்கும் என்று வைரமுத்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிக்கிய 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும்தான் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள். இது கோயில் திருவிழா அல்லது கும்பமேளா அல்ல. ஒரு சாமியார் […]
மணல் கொள்ளையில் அமைச்சர் துரைமுருகனுக்கு சம்மன்? அமலாக்கத்துறை கைதுக்கு ரெடி

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும், 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறப்போர் ஜெயராமன், ‘4730 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது வெறும் 4.9 ஹெக்டர் நிலத்திற்கு அனுமதி வாங்கி 105 ஹெக்டர் தோண்டி இருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். தமிழ்நாடு அரசு ஒரு […]
உலகிலேயே இந்தியா நம்பர் 1. மோடியின் சாதனை இந்த விஷயத்திலா..?

இஸ்லாம் நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொடுமை அதிகம் நடப்பதாக நம்பிவரும் சூழலில், பெண்களுக்கு ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கொடுத்து அதிர வைத்துள்ளது பெண்களை தெய்வமாக மதிக்கும் நாட்டில் உண்மையில் மாட்டுக்கு இருக்கும் மதிப்பு கூட பெண்களுக்கு இல்லை என்கிறது இந்த ஆய்வறிக்கை. லண்டனில் செயல்பட்டு வரும் தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘’இந்தியாவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதேபோல், […]

