ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி: தலித் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த பா.ரஞ்சித்!

பகுஜன் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மற்ற 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். […]
எஸ்.ஐ.க்கள், டி.எஸ்.பி.க்களுக்கு புது உத்தரவு! அனல் பறக்கும் காவல் துறை!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றிய சந்தீப்ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கூடுதல் டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டார். அதே போல் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமினம் செய்யப்பட்டார். கடந்த (ஜூலை)5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் […]
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன், அமலாக்கத் துறைக்கு ஆப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, அமலாக்கத் துறைக்கு பெரும் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம், ‘’சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீதான அமலாக்க துறையின் கைது […]
விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள்! பிரேமலதா எச்சரிக்கை!

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழகமே திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக அரசு இறுதி மரியாதையுடன் அவரது உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வெறும் 4ஆயிரத்து சொச்ச்ம வாக்கு […]
ஒன்றிய அரசு, நீட் எதிர்ப்பு. விஜய் டெரர் அரசியல்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பரிசு வழங்கி பாராட்டும் விழா இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘’இன்று நான் நீட் தேர்வு பற்றி பேசவேண்டி இருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்த தேர்வு நியாயமானதாக இல்லை’’ என்று முதன்முதலாக மத்திய அரசு மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். குறிப்பாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அதோடு, […]
தளபதி பெயர் கொண்டவருக்கு சீமான் ஹேப்பி பர்த் டே வாழ்த்து

நடிகர் விஜய் இன்று 50வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி மரணங்கள் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டு மக்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து 2026 தேர்தலுக்கு அச்சாரம் போட்டுள்ளார் சீமான். விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய்யின் […]
நடிகர் விஜய் பிரியாணி விருந்து மெகா சக்சஸ்..?

உலகப் பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுக்க ஏழை மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று அவரது தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுக்க பிரியாணி விருந்து மெகா சக்சஸ் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வில் ரசிகைகள் […]
தேர்தல் ரிசல்ட்டுக்குப் பயந்து ரஜினிகாந்த் எஸ்கேப்?

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரஜினிகாந்தை களத்தில் இறக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொண்டது. அவற்றில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இந்த நிலையில் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வருவதையொட்டி, இங்கிருந்து எஸ்கேப் ஆகி இமயமலைக்குப் போகிறார் ரஜினிகாந்த். தமிழகத்தில் இருந்தால் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து வெளியிட வேண்டியிருக்கும். பா.ஜ.க.வுக்கு தோல்வி ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு கருத்து தெர்விப்பது சிக்கலாக மாறிவிடும் என்பதாலே அவசரம் அவசரமாக இமயமலைக்குப் […]
விஜய், த்ரிஷாவுக்கு போதைப் பொருள் பரிசோதனை..?

சினிமா நட்சத்திரங்கள் பங்குகொள்ளும் பார்ட்டிகளில் எல்லாம் கொக்கைன் சப்ளை செய்யப்படுகிறது என்று பாடகியும் நடிகையுமான சுசித்ரா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் விஜய், த்ரிஷா ஆகியோருக்கு போதைப் போதைப்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கோரிக்கை வைத்திருப்பது கடும் அதிர்வு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீரலட்சுமி, ‘’போதைப்பொருளின் தீமைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை […]
ராஷ்மிகா மந்தனா வந்தாச்சு. மோடி ஆர்மிக்கு குஷி

கங்கனா ரனாவத் மட்டுமே பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், திடீரென நடிகை ராஷ்மிகா மந்தனா களத்தில் இறங்கி பரபரப்பு கிளப்பியிருக்கிறார். கண்ணைத் திறந்து பாருங்க, இந்தியா எத்தனை பெரிய வளர்ச்சி அடைஞ்சிருக்கு. கார் போறதுக்கு எப்படியெல்லாம் பாதை போட்டிருக்காங்க என்று புளங்காகிதம் அடைந்து பேசும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதையடுத்து பா.ஜ.க.வினர் படு குஷியாகியிருக்கிறார்கள். ஒரு நடிகைக்குத் தெரிந்தது கூட மக்களுக்குத் தெரியவில்லை. ராஷ்மிகா சொல்வதைக் கேட்டு ஓட்டுப் போடுங்கள் என்று பேசி வருகிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் […]

