News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய்யைப் பார்த்து தி.மு.க, நடுங்குகிறதா..? உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் அன்பரசன்

  உதயநிதிக்குப் போட்டியாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு செய்திருப்பதை அடுத்து, அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால், தி.மு.க.வினர் மட்டுமே தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமேடையில் வைத்து, ‘விஜய்யைப் பார்த்து தி.மு.க.வினர் யாரும் பயப்படக் கூடாது’ என்று பேசியிருப்பது ஒப்புதல் வாக்குமூலமாக மாறியிருக்கிறது. அமைச்சர் அன்பரசன் விஜய் வருகை குறித்து ஏற்கெனவே, ‘’நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க… ஆனா, அவங்களுக்கு அறிவு இருக்குமான்னா இருக்காது. கட்சி நடத்துறதுன்னா சாதாரணமா?’ என்று முதலில் […]

கோட் திரைப்படம்: கேரளாவில் அதிசயத்தை நடத்திய ரசிகைகள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் இன்று (செப்.5) உலகளவில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை த்ரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் அடித்து துவம்சம் செய்துள்ளது மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஏ.ஐ. காட்சிகள்தான்.   யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது என்று […]

விஜய்யை கவிழ்த்த வெங்கட்பிரபு.? கதை இது தான். சீமான் அறிக்கை பின்னணி ட்விஸ்ட்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தியேட்டரில் இருந்தே கலவையான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின. பிளாக்பஸ்டர், சூப்பர் டூப்பர் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வந்தாலும் விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ரொம்பவே சுமார், படு மொக்கை என்று கூறிவருகிறார்கள். குறிப்பாக விஜய்காந்த் மற்றும் வில்லனாக நடிக்கும் விஜய் காட்சிகளின் ஏ.ஐ. உருவாக்கம் சிறப்பாக அமையவில்லை என்பதால் […]

எம்.ஜி.ஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன். விஜய்க்கு கோட். தி.மு.க. எதிர்ப்புக்கு குஷியாகும் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட்டைக் கொடுக்காமல் 2000 ரூபாய்க்கு விற்பவர்களால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும்? என்று விஜய் மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். அதோடு, ’அரசியல் கட்சிக்குத் தலைவராக வேண்டும் என்றால் அவருக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு வேண்டும். அது விஜய்யிடம் சுத்தமா இல்லை’ என்று தி.மு.க.வினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கோட் படம் பார்ப்பதற்கு 2000 ரூபாய் தருவதற்கும் விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கும் நிலையில், கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் […]

காந்தகார் விமான கடத்தல் சீரிஸ்க்கு தடை..? வாஜ்பாயைக் காப்பாற்றும் மோடி

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ஐ.சி. 818 காந்தகார் ஹைஜாக் தொடரை முடக்குவதற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்திருக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்த நேரத்தில் நடந்த இந்த மாபெரும் அவமானத்தை மூடி மறைப்பதற்கு மோடி அரசு முயற்சி செய்வதாக கண்டனம் எழுந்திருக்கிறது. இந்திய தேசத்தின் பிரதமராக பா.ஜ.க.வின் வாஜ்பாய் இருந்த நேரத்தில் கந்தகார் விமான ஹைஜாக் நடைபெற்றது. அந்த முயற்சியை முறியடிக்க முடியாமல் மேளதாளத்துடன் தீவிரவாதிகளை அனுப்பிவைத்தது […]

தள்ளிப் போகும் விஜய் மாநாட்டு..? தி.மு.க. உள்குத்து

நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு வந்துவிட்டால் உதயநிதிக்கு சவாலாக இருப்பார் என்பதால் தி.மு.க.வினர் சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் விஜய் மாநாட்டை நடத்திவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு இடைஞ்சல் செய்துவருவதாக அவரது ரசிகர்கள் கொதிக்கிறார்கள். விஜய் ஜாதகப்படி வட தமிழ்நாட்டில் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் […]

சீமானை கூப்பிடாதீங்க தலைவா..? விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் ரசிகர்கள்

திருச்சியில் நடிகர் விஜய் நடத்தயிருக்கும் மாநாட்டில் நாம் தமிழர் சீமானும் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘நமது கட்சியின் மாநாட்டிற்கு மற்ற கட்சி தலைவர்களை அழைக்க வேண்டாம் தலைவா. இங்கே நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, மாநாட்டில் புகழ்பவர்கள் பின்னாட்களில் இகழலாம். ஆகவே மாநாட்டில் உங்கள் மீது மட்டுமே லைம்லைட் இருக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்துவருகிறார்கள். விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 10 லட்சம் பேர் திரள வேண்டும் என்று […]

கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் சிவகார்த்திகேயன்..? விடாமல் துரத்தும் சூர்யா, சிம்பு

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் கசப்பான நிகழ்வுகள் நடந்தேறின. அதனால், இந்த ஆண்டு அவர் பிக்பாஸ் தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்தவர் யார் என்று பெரிய குடுமிப்பிடி சண்டையே நடந்துவருகிறது. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. கடந்த சீசனில் சிம்பு தலை காட்டியிருந்தார். அதனால், அவர் நடத்துவார் என்று சொல்லப்பட்டு வந்த நேரத்தில், கமல்ஹாசன் சாய்ஸ் சிவகார்த்திகேயன் என்று […]

பாலியல் கைதியாக சிக்கியிருக்கும் பிரபல தமிழ் நடிகை.! அதிரவைக்கும் துபாய் செக்ஸ் ராக்கெட்

கலைநிகழ்ச்சி என்ற பெயரில் துபாய்க்கு அழைத்துச்செல்லப்பட்ட பிரபல தமிழ் நடிகை நட்சத்திர ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டிருப்பதாகவும், அவரை மீட்கும் முயற்சியில் தமிழக காவல் துறை இறங்கியிருப்பதாக வரும் தகவல் கோடம்பாக்கத்தை அலற விட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறைக்கு கடந்த மே 29ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மூலம் புகார் ஒன்று வந்தது. அதில், துபாயில் சட்டவிரோதமாக கலை நிகழ்ச்சி என்று நடிகைகள் மற்றும் நடன கலைஞர்களான இளம்பெண்களை அழைத்து சென்று […]

மேட்ரிமோனியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றிய பெண்! கைதானது எப்படி?

மேட்ரிமோனியலில் மணமகன் மற்றும் மணமகள் தேவை என்று மணம் முடிப்பவர்கள் ஏராளம். சொந்தத்தில் இருந்து பெண் மற்றும் மாப்பிள்ளை எடுப்பது அரிதாகிவிட்டது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு பெண் தன்வலையில் போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட பல்வேறு ஆண்களை தன் காதல் வலையில் வீழ்த்தி பல லட்சம் ரூபாய் பணம் நகைகளை சுருட்டிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பொய்னாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 35 வயதான ஸ்ருதி என்ற பெண்ணை சமீபத்தில் […]