Share via:
இன்று தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்
மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவெக
அரசு முடிவெடுத்திருப்பது மிகப்பெரும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தலைமை செயலகத்திற்கு
வருகை தந்த நேரத்தில், அங்கு காத்திருந்த காவல்துறையினருக்கு சல்யூட் வைத்தபடி உள்ளே
நுழைந்தார்.
விஜய் நுழைந்ததும் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இந்த அமைச்சரவை
கூட்டத்தில், மாநிலத்தில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துவதற்காக ஒரு ஆணையம் அமைப்பதற்கு
அரசு முடிவு செய்துள்ளது. இது, நீண்ட நாட்களாக தமிழகத்தில் எழுப்பப்படும் கோரிக்கை
ஆகும். இதை மத்திய அரசு மட்டுமே செய்யவேண்டும் என்று ஸ்டாலின் அரசு தள்ளிப்போட்டது.
ஆனால், விஜய் அரசு அதை நிறைவேற்றும் வகையில் ஆணையம் அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது
அதேபோல், மக்களுக்கு என்ன தேவையோ அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும். மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும். மக்களின் கோரிக்கைகளை
நிறைவேற்ற முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு விஜய் மூன்று
முக்கிய அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளார்.
அதோடு மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் பிரச்சனைகளுக்குத
முன்னுரிமை கொடுத்து தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு, மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கு
எதிராக வெளியான தீர்ப்புக்கு சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் தாழாம்பூர் அனாதீன நிலம் தொடர்பான பிரச்னைகளும்
விவாதிக்கப்பட்டுள்ளன.
விரைவில் இது தொடர்பான அதிரடி உத்தரவுகள் வெளியாகும்.

