Share via:
கேரள மாநிலத்தில் உம்மன்சாண்டி மறைவால் புதுப்பள்ளி மற்றும் திரிபுரா ஆகிய 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்குவங்காளம்,உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போதைய முன்னணி நிலவரம் பின் வருமாறு:&
கேரள மாநிலம் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பளர் சாண்டி உம்மன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் வெற்றிமுகம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 31,658 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் 4,278 பெற்றுள்ளார்.
திரிபுரா மாநிலத்தை பொறுத்தவரையில் நடைபெற்ற 2 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 2 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது இந்தியா கூட்டணியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்சாநகர் தொகுதியில் தஃபாஜல் ஹொசைன், தான்பூர் தொகுதியில் பிந்து தேப்நாத் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7 சட்டப்பேரவை தொகுதிகளின் முன்னிலை நிலவரம்:&
கேரளா – காங்கிரஸ் முன்னிலை
உ.பி- சமாஜ்வாடி முன்னிலை
ஜார்கண்ட் – பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
திரிபுரா (2) – பாஜக ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் முன்னிலை
உத்தரகாண்ட் – பாஜக முன்னிலை
மேற்கு வங்கம்- பாஜக முன்னிலை
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை ந நிலவரம் மாறுபட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.