Share via:
தவெக ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் வரை, எங்கள் மீட்டிங், மக்கள்
சந்திப்பு, போரட்டத்துக்கு திமுக அரசு அனுமதி கொடுப்பதே இல்லை என்று கொதித்த விஜய்
இன்று திமுக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து, போராடியவர்களை கைது செய்திருக்கிறார்.
பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் “Thug
Life Moment” என்று ரீல்ஸ் வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவித்த அமைச்சர்
கில்லி சரத்தை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்த திமுக மாணவரணி
முன்வந்தது.
தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நடத்த இருந்த போராட்டம் ஆர்ப்பாட்டங்களுக்கு
காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே
நடைபெறவிருந்த திமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து போராட்டத்தில் பங்கேற்பவர்களை
கைது செய்துள்ளது.
அமைச்சர் போதைப் பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இன்னும்
விளக்கம் தராதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கே பயந்துட்டீங்களா
சி.எம்.சார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கனிமொழி.
அவரது பதிவில், ‘’பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது
போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய
வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு,
எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது. கைது செய்யப்பட்ட
திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்..’’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
