News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

ஒரிசா தேர்தல் சமயத்தில் தமிழ் நாடு மக்களை திருடர்கள் என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி இப்போது பீகார் மாநிலத் தேர்தலில் கொடுமைக்காரர்கள் என்று பேசியிருக்கிறார்.  

தமிழ்நாட்டுக்கு வந்தால் திருவள்ளுவரைப் பிடிக்கும், தமிழை, தமிழர்களை பிடிக்கும் என வேடம் போடும் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தில், இங்கிருந்து தமிழகத்துக்கு வேலைக்குச் செல்லும் மக்களை தமிழர்கள் கொடுமைப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்.

பீகார் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருந்தால் அவர்கள் எதற்கு மாநிலம் மாநிலமாக செல்ல வேண்டிய நிலை வரப் போகிறது வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்று புரூடா விட்டாரே நரேந்திர மோடி சொன்னதை ஏன் செய்யவில்லை என்று கொதித்து எழுகிறார்கள்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘’நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்தவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பீகாரிகளான ஆர்.என்.ரவி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் இங்கே அவமானப்படுத்துவதையே சொல்கிறார்களா என்று கிண்டல் செய்கிறார்கள். பீகார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப் படுவதாக பிரதமர் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் பிரதமர் பீகார் தொழிலாளர்களின் வேலை‌ வாய்ப்பிலும், திங்கிற சோற்றிலும் மண் அள்ளி போடுகிறார் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link