News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டது. வேலை பாதுகாப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட பின்னரும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விஜய் கடும் ஆவேசம் அடைந்திருக்கிறார். இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் போராட்டத்தில் இறங்கினால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றே தெரிகிறது.

காலி மது பாட்டில்களைப் பெறுதல் மற்றும் யுபிஐ நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளைத் திறக்காமல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இன்றும் போராட்டம் நடத்த டாஸ்மாக் பணியாளர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த போராட்டத்தால் தமிழ்க அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் விக்னேஷ், ’’டாஸ்மாக் கடையை மூடிய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட். 4,040 கடைகளில் 460 கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக்கை அடைப்பவர்கள் மீது நடவடிக்கை. முறைகேடாக சென்ற பணத்தை சீரமைக்கவே MRP-ல் ரூ.10 சேர்ப்பு. அரசின் முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 01.11.2026 அன்று நண்பகல் 12 மணி முதல் கடையை மூடி ரூ.150 கோடி இழப்பை ஏற்படுத்திய கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு “ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?” என நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது

அதில், தாங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி இக்கடையினை நண்பகல் 12 மணியிலிருந்து விற்பனை பாதிக்கும் அளவில் மதுபான கடையினை மூடியதால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, உடனடியாக பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகும் என தெரிவிக்கப்படுவதாக அறிவுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய ஒரு நாள் அடைப்பால் தமிழக அரசுக்கு சுமார் ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு போடும் திட்டத்தை செயல்படுத்தாமல், மக்களுக்கு சேவை செய்யாமல், கடையை மூடி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் ஊழியர்களின் இந்த போக்கை இனி பொறுக்க முடியாது என்று தான் இந்த மெமோ வேட்டு நடத்தப்பட்டுள்ளது. திருப்திகரமான விளக்கம் அளிக்காதவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்பது உறுதி.

விஜய் இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால் டாஸ்மாக் ஊழியர்கள் வேறு வழியின்றி வேலைக்குத் திரும்புவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் தற்காலிக ஊழியர்கள் மூலம் கடை நடத்தப்படலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link