News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது ஷாஜகான் இல்லை, ராஜா மான்சிங்கின் அரண்மனையைத்தான் அவர் சீரமைத்துள்ளார் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கட்டிடக்கலைக்கே பெருமை, உலக அதிசயம், காதலர்களின் நினைவுச்சின்னம் என்று போற்றப்பட்டு வரும் தாஜ்மால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த கட்டிடம் முழுவதும் பளிங்கு கற்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டினார் என்கிறது வரலாறு. ஆனால் இந்த வரலாறை பொய்யாக்கும் வகையில் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், முகலாய மன்னர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டவில்லை. ராஜா மான்சிங்கின் அரண்மனையையே ஷாஜகான் சீரமைத்து இருக்கிறார். எனவே வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று கோரியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link