News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மின்வாரியத்தை மையப்படுத்தி புதிதாக களைகட்டியுள்ள ஸ்கேம் பற்றி மின்வாரியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் மின் கட்டண நிலைப்பாடு குறித்து சரிபார்த்த பின்னர், நீங்கள் அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள்.


மேலும் பணம் செலுத்த இந்த லிங்க்¬க் கிளிக் செய்யுங்கள் என்று ஏதேனும் லிங்க் வந்தால் அதை கிளிக் செய்யாமல், உடனடியாக 1930ஐ அழைத்து புகார் தெரிவிக்கவும் என்று மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஒருவேளை தெரியாமல் அந்த லிங்க்கை தொட்டுவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம் ஏற்படும் என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள் உடனடியாக http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் அளிக்க வேண்டும். அதேபோல் @tncybercrimeoff என்ற எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் புகார் அளிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link