Share via:
நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆன்லைனில் மிகவும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்துடன் ரூ.500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்திற்கு வெற்றி விழா நடத்த படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான அனுமதியை பெரியமேடு காவல்துறையிடம் கோரியிருந்தனர்.
வெற்றி விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (நவ.1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பிரத்யேகமாக டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேக்கை அணிந்து வரும் நிர்வாகிகளை மட்டுமே விழா நடக்கும் அரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த லியோ திரைப்பட இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு அதிகப்படியான பாஸ்கள் கோரப்பட்டது என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது வெற்றி விழாவிற்கான டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒரு பக்கம் நாளை நடைபெறும் என்று கூறப்படும் லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏனென்றால் நடிகர் விஜய் தனது 68வது படத்திற்கான படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், வெற்றி விழாவில் பங்கேற்கமாட்டார் என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். வெற்றி விழாவை காண வரும் ரசிகர்களின் முதல் ஆர்வமே விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்பதுதான்.
எனவே ரசிகர்களை குஷிபடுத்த நடிகர் விஜய் வருவாரா? அல்லது புது படத்தின் கெட்டப்பை மறைக்க வேண்டும் என்பதற்காக வராமல் இருந்துவிடுவாரா என்பது நாளை தெரிந்துவிடும்.