Share via:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
செந்தில்பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், சாட்சியங்களை கலைக்கக் கூடும். எனவே உடல்நிலையை கருத்தில் கொண்டு கூட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை இன்று நீதிபதி அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் மீதான விசாரணை வருகிற நவம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.