Share via:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொங்கல், தீபாவளி, தொடர் விடுமுறை, பண்டிகைகளை கொண்டா சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.
அந்த வகையில் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி வருகிற நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படக்கூடிய 6,300 பேருந்துகளுடன் 4,675 பேருந்துகள் சேர்த்து மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஊர்களுக்கு 5,920 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆக மொத்தம் 16,795 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையம், கே.கே.நகர், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.