News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நவம்பர் 9ம் தேதியன்று தமிழ்நாட்டில் லாரிகள் இயங்காது என்று லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.50 லட்சம் லாரிகள் இயங்கி வருகிறது. டீசல் விலை உயர்வை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகத்தில் பசுமை வரியும் அதிகரித்துள்ளது லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500ல் இருந்து 750 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596ல் இருந்து ரூ.4,550 ஆக உயர்ந்துள்ளது. 10 சக்கர லாரிகளை பொறுத்த வரையில் 4,959 ஆக இருந்தது தற்போது 7,059 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 12, 14, 16 சக்கர லாரிகளின் பசுமை வரியும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வருகிற நவம்பர் 9ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழகத்தில் லாரிகள் இயங்காது என்று அறிவித்துள்ளன.

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி பொது மக்களும், தொழில்முறை சம்பந்தமாக பல நிறுவனங்களும் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link