Share via:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்ற வகையில் மொத்தம் 3.10 கோடி பெண் வாக்காளர்களும், 3 கோடி ஆண் வாக்காளர்களும், 8,016 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
புதிய வாக்காளர்களை பொறுத்தவரையில் 3.94 லட்சம் பேர் என்றும் அதில் ஆண்கள் 2.18 லட்சமும், பெண்கள் 1.75 லட்சமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியான சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியான கீழ்வேளூரில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யரபிரதா சாகு பேசும்போது, ‘‘தமிழகத்தில் 17வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் 18 வயது நிரம்பியதும் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் உதவிக்கான மொபைல் செயலி மற்றும் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் திருத்தப்பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது’’ என்று தெரிவித்தார்.