News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாவட்ட அளவிலான பட்டியலை வெளியிட உள்ளனர்.

அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தங்கள் மேற்கொள்வதற்காக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவோ, அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி வருகிற நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19 ஆகிய 4 நாட்களில் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். இப்பணி வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும். இதன் தொடர்ச்சியாக இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவர மாதம் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link