Share via:
பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகைபுரிய உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் இல்லம் முன்பாக நடப்பட்ட பா.ஜ.க. கொடிக் கம்பம் அகற்றப்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் மத்தியிலும் பற்றி எரிகிறது. இதனால் தமிழக அரசு பா.ஜ.க.வை வெறுப்புணர்வுடன் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 4 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்த குழுவில் சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி.மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் இன்று தமிழகம் வருகிறார்கள். மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் இக்குழுவினர் தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கை என்னவாக இருக்கும் என்றும், அதன் எதிரொலியாக மத்திய பா.ஜ.க. தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்தும் விரைவில் தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.