News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகை அமலாபால் தனது காதலன் யார் என்பது குறித்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யுடன் இணைந்து செய்து கொண்ட திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதற்கிடையில் இயக்குனர் விஜய் 2வது திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டிலாகிவிட்டார்.

இருப்பினும் தமிழ் இந்தி என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அமலாபால், சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அமலாபால் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் திடீரென்று லவ் ப்ரபோஸ் செய்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இன்ஸ்டாபக்கத்தில் வைரலாகி வருகிறது.

நடனக்குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருந்த ஜனா தேசாய், அதைத்தொடர்ந்து மண்டியிட்டபடி அமலாபாலிடம் ஒரு மோதிரத்தைக் காண்பித்து, ‘வில் யூ மேரி மீது’ என்று ப்ரபோஸ் செய்கிறார். அதை ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொள்ளும் அமலாபால், ஜனாதேசாய்க்கு உதட்டோடு உதடு சேர்த்து பல முத்தங்களை அள்ளிக் கொடுத்து கட்டியணைக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link