News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘அரிசி’ திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கும் இரா.முத்தரசனுடன், சிசர் மனோகர், கோவி.இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன் அன்பு, ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘அரிசி’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜான்சன், அசோக் சார்லஸ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இரா. முத்தரசன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாமல், கட்சித் தொண்டர்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். மேலும் இரா.முத்தரசனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link