Share via:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 வாரங்களில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது என்பதால், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தீபாவளி போனஸ் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த ஒப்புதல் அறிவிப்பின்படி ‘சி’ பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே போல் துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் கிடைக்க உள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் எந்தெந்த பிரிவு ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை போனசாக கிடைக்கும் என்பது குறித்த மத்திய அரசின் விரிவான அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு சாப்பிடும் இனிப்பை விட தீபாவளி போனஸ் குறித்த இனிப்பு அதைவிட சுவையானதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.