News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நேற்று (அக்.12) என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் இன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.


அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், பிரபல கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன்தான் கொலையாளி என்று உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் ரவுடி முத்து சரவணனை தேடி வந்தனர். 


இந்நிலையில் நேற்று (அக்டோபர் 12) அதிகாலை 5 மணியளவில் ரவுடி முத்துசரவணன் மற்றும் அவனது கூட்டாளி சதீஷ் ஆகியோர் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது போலீசுக்கும் ரவுடிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் 2 ரவுடிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 போலீசார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், பிரபல கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன்தான் கொலையாளி என்று உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் ரவுடி முத்து சரவணனை தேடி வந்தனர். 


அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் ரவுடி முத்துசரவணன் மற்றும் அவனது கூட்டாளி சதீஷ் ஆகியோர் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது போலீசுக்கும் ரவுடிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் 2 ரவுடிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 போலீசார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


இதற்கிடையில் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட ரவுடி முத்துசரவணனின் தந்தை கோவிந்தராஜ்,  தனது மகனை போலீசார் பணம் வாங்கிக் கொண்டு கொலை செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை உடலை வாங்கப் போவதில்லை எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்களும் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொன்னேரி கோட்டாட்சியர் ஆய்வு செய்த பின்னர் பிரேத பரிசோதனை நடப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link